இந்தியாவே காத்து கிடக்கும் காருக்கு முன்பதிவு தொடக்கம்... ஹூண்டாய் ஷோரூம்களுக்கு போலீஸ் பாதுகாப்புதான் போடணும்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இதன் என் லைன் (N Line) மாடலை, ஹூண்டாய் நிறுவனம் வரும் மார்ச் 11ம் தேதி (March 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் முன் பகுதியில் என் லைன் லோகோ உடன் கூடிய நேர்த்தியான க்ரில் வழங்கப்பட்டுள்ளது.

Hyundai Creta N Line

இதுதவிர முன் பக்க பம்பரில், சிகப்பு நிற அலங்காரங்களுடன் புதிய டிசைனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலில், புதிய 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன் மற்றும் பின் பகுதியில் சிகப்பு நிற பிரேக் காலிபர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த காரின் பக்கவாட்டு மற்றும் பின் பகுதிகளிலும் என் லைன் லோகோக்களை நாம் காண முடியும். பாதுகாப்பை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு, ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Hyundai Creta N Line Safety

ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலின் உட்புறத்தில் கருப்பு நிற தீம் கொடுக்கப்பட்டிருக்கும். செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலில், 1.5 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 160 பிஎஸ் பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ரெகுலர் ஹூண்டாய் க்ரெட்டா உடன் ஒப்பிடும்போது, இந்த என் லைன் மாடலில், சஸ்பென்ஸன் ரீட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். அத்துடன் லைசென்சர் சப்தமும் வேறு மாதிரியாக இருக்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக ஹூண்டாய் ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) மற்றும் ஹூண்டாய் வெனியூ என் லைன் (Hyundai Venue N Line) ஆகிய என் லைன் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலின் ஆரம்ப விலை 19 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 22 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கும். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த கேள்விக்கான அதிகாரப்பூர்வமான விடை, வரும் மார்ச் 11ம் தேதி நமக்கு கிடைத்து விடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 29, 2024, 23:19 [IST]
English summary
Hyundai creta n line bookings open all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+