மொத்த இந்தியாவும் இந்த காருக்குதான் தவம் கெடக்குது! இவ்ளோ சீக்கிரம் வரப்போகுதா! கலக்கத்தில் போட்டி நிறுவனங்கள்
இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ள நிறுவனம் ஹூண்டாய் (Hyundai). ஆனால் ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்திற்கு சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிக கடுமையான போட்டியை வழங்க தொடங்கியுள்ளது.
எனவே தனது 2வது இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக பல்வேறு புதிய கார் மாடல்களை ஹூண்டாய் நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் (Hyundai Creta N Line) மாடல், வரும் மார்ச் 11ம் தேதி (March 11) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு அறிமுகமே தேவையில்லை. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஆகும். இதன் என் லைன் மாடலைதான் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. என் லைன் என்பது சக்தி வாய்ந்த மற்றும் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் ஆகும்.
முன்னதாக ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue N Line) ஆகிய கார்களின் என் லைன் மாடல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலில், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (1.5L Turbo Petrol Engine) ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம்.
ரெகுலர் மாடலிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில், நிறைய மாற்றங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் விற்பனைக்கு வரவிருப்பது இதுவே முதல் முறையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை ஏற்கனவே மிகவும் சிறப்பாகதான் இருந்து வருகிறது. என் லைன் மாடலின் வருகைக்கு பின்னர், விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். இது போட்டி மாடல்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
ஹூண்டாய் க்ரெட்டா காரின் என் லைன் மாடலை தொடர்ந்து, ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) காரின் என் லைன் மாடல் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஹூண்டாய் வெர்னா என் லைன் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது கேமராவின் கண்களில் சிக்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








