இந்தியாவே தவம் கிடக்கும் கார் நாளை அறிமுகம்! நைட் தூக்கமே வராதே! எப்படா விடியும் மனநிலையில் வாடிக்கையாளர்கள்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் என் லைன் (N Line) மாடலை, ஹூண்டாய் நிறுவனம் நாளை (மார்ச் 11) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற என் லைன் மாடல்களை போலவே, இது க்ரெட்டா காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் இதற்கு முன்பாக ஐ20 (i20) மற்றும் வெனியூ (Venue) ஆகிய கார்களின் என் லைன் மாடல்களை விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Hyundai Creta N Line

இந்த வரிசையில்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடல் இந்திய சந்தையில் நாளை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி, க்ரெட்டா என் லைன் மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Hyundai Creta N Line Interior

செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலில், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. அதிகபட்சமாக 160 ஹெச்பி பவர் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் என மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் அளவில் 2 திரைகள் முக்கியமானதாக இருக்கும். இதில் ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்.

இதுதவிர ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி கேமரா, பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், போஸ் மியூசிக் சிஸ்டம், லெவல் 2 அடாஸ் ஆகிய வசதிகளும், ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலில் வழங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா என் லைன் மாடலுக்கு நேரடி போட்டி என்று எந்த மாடலும் இல்லை. எனினும் இந்த என் லைன் மாடலின் வருகை, கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 10, 2024, 20:32 [IST]
English summary
Hyundai creta n line launch tomorrow all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+