அழகுக்கு அழகாவும் இருக்கு! அதீத திறனையும் வெளிப்படுத்தும்! இத வாங்கியே ஆகணும்னு எல்லாரும் முடிவு பண்ண போறாங்க!

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) இருக்கின்றது. ஐந்து நிமிடங்களுக்கு ஒன்று என்கிற வீதத்திலேயே இந்த கார் நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கே கூடுதல் வரவேற்பைப் பெறும் நோக்கில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் என் லைன் (Creta N Line) தேர்வை

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. வழக்கமான கிரெட்டாவைக் காட்டிலும் அதிக கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக திறனை வெளியேற்றும் சிறப்பு வசதிகளுடனேயே இந்த வெர்ஷன் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Hyundai creta n line

இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் எஸ்யூவி (Hyundai Creta N Line SUV) காருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் தற்போது அந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக இந்த எஸ்யூவிக்கு ரூ. 16.82 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது கிரெட்டா என்-லைன் வெர்ஷனின் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இரண்டு விதமான வேரியண்டுகளிலேயே கிரெட்டா என்-லைன் விற்பனைக்குக் கிடைக்கும். என்8 (N10) மற்றும் என்10 (N10) ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டிலும் 1.5 லிட்டர் டி-ஜிடிஐ மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Hyundai creta n line rear

அதேவேளையில், 6 எம்டி (6MT) மற்றும் 7 டிசிடி (7DCT) ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இவற்றில் வழங்கப்படுகின்றன. ஆக ஹூண்டாய் கிரெட்டா என் லைன் இந்தியாவில் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். என்8 1.5 லிட்டர் ஜிடிஐ, 6எம்டி வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாகும்.

இதுவே ரூ. 16.82 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக என்8 1.5 லிட்டர் டி-ஜிடிஐ 7 டிசிடி இருக்கின்றது. இதன் விலை ரூ. 18.32 லட்சம் ஆகும். இதனைத்தொடர்ந்து என்10 1.5 லிட்டர் டி-ஜிடிஐ 6 எம்டி ரூ. 19.34 லட்சத்திற்கும், என்10 1.5 லிட்டர் டி-ஜிடிஐ 7 டிசிடி ரூ. 20.29 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது.

Hyundai creta n line front look

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்தியாவில் வழக்கமான ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி ரூ. 10.99 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். வழக்கமான கிரெட்டாவைவிட பலமடங்கு அதிக கவர்ச்சியானதாகவும், அதிக சிறப்பு வசதிகளையும் தாங்கிய தேர்வாக கிரெட்டா என் லைன் இருப்பதனாலேயே அதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது.

அந்தவகையில், மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்தை வழங்கக் கூடிய பாடி பேனல்கள் பல இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கிரில், ஷார்ப்பான முன் பக்கம் மற்றும் மிகுந்த கவர்ச்சியான அமைப்புடைய ரியர் பம்பர் ஆகியவை இந்த காருக்கு கூடுதல் அழகையும், முரட்டுத் தனமான தோற்றத்தையும் வழங்கும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

Hyundai creta n line side view

இதுதவிர, புதிய 18 அங்குல டூயல் டோன்கள் கொண்ட அலாய் வீல், சிவப்பு நிற பிரேக் காலிபர்கள், என் லைன் எனும் பேட்ஜ் ஆகியவற்றை கிரெட்டா என் லைனில் கூடுதலாக பார்க்க முடியும். காரின் இருக்கைகளிலும் என் லைன் எழுத்துக்களை நம்மால் பார்க்க முடிகின்றது. எனவே வெளிப்புறத்தைப் போலவே உட்பக்கமும் அதிக ஸ்போர்ட்டியானதாக காட்சியளிக்கின்றது.

இத்துடன், சிவப்பு நிற அலங்கார அணிகலன்களையும் இந்த காரில் பார்க்க முடிகின்றது. இருக்கையில் உள்ள தையல்களில், டிசைன்கள், ஏசி வெண்ட், இன்ஃபோடெயின்ட்மென்ட் இருக்கும் இடம், வெளிப்புறம் மற்றும் கியர் லிவர் பல பகுதிகளில் இந்த சிவப்பு நிற அக்செண்டைப் பார்க்க முடிகின்றது.

கிரெட்டா என் லைன்-இல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், முன்னதாக கூறியதைப் போல 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றன.

கிரெட்டா என் லைன் ஒரு லிட்டருக்கு 18 கிமீ வரையில் மைலேஜ் தரும் ஹூண்டாய் தெரிவித்து இருக்கின்றது. இதன் எஞ்சின் ஸ்போர்ட்ஸ் கார்களை போல சூப்பரான திறனை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட போதிலும் இந்த அதிக மைலேஜை வழங்கும் என நிறுவனம் கூறி இருக்கின்றது.

மேலும், வழக்கமான கிரெட்டாவின் எக்சாஸ்ட் பைப்பில் இருந்து வரும் சத்தத்தைவிட இதில் இருந்து வரும் ரம்மியமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதேபோல், மிக சிறந்த ஹேண்ட்லிங் மற்றும் ஓட்டு அனுபவத்தையும் கிரெட்டா என் லைன் வழங்கும் என்றும் ஹூண்டாய் தெரிவித்து இருக்கின்றது.

புதிய ஹூண்டாய் கிரெட்டா என் லைன் எஸ்யூவிக்கு இந்தியாவில் ஏற்கனவே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இந்த காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் அதன் ஐ20 மற்றும் வென்யூ ஆகிய இரண்டு கார் மாடல்களிலும் என் லைன் வெர்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இவற்றின் வரிசையில் புதிதாக கிரெட்டா என் லைன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக ஆறு விதமான வண்ண தேர்வுகளில் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அட்லஸ் ஒயிட், அபிஸ் பிளாக், டைட்டன் கிரே மேட் ஆகிய ஒற்றை நிற தேர்வுகளிலும், தண்டர் ப்ளூ - அபிஸ் பிளாக் ரூஃப், ஷேடோவ் கிரே - அபிஸ் பிளாக் ரூஃப் மற்றும் அட்லஸ் ஒயிட் - அபிஸ் பிளாக் ரூஃப் ஆகிய டூயல் டோன் தேர்வுகளிலும் கிரெட்டா விற்பனைக்குக் கிடைக்கும்.

ஏற்கனவே கூறியதைப் போல இது அதிக பவர்ஃபுல் மோட்டாரையே தாங்கி இருக்கின்றது. இது வெறும் 9செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. 3விதமான டிரைவிங் மோட்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், ஸ்நோ, சேண்ட் மற்றும் மட் ஆகிய மூன்று விதமான கன்ட்ரோல்கள் கொண்ட டிராக்சன் கன்ட்ரோலும் கிரெட்டா என் லைன்-இல் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களும் கிரெட்டா என் லைன்-இல் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றது. 6 ஏர் பேக்குகள், டேஷ்கேம், ஏபிஎஸ், இபிடி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), இஎஸ்எஸ், டிபிஎம்எஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் பாயிண்ட், லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முதன் முதலில் 2015லேயே கிரெட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இதன் புதிய தலைமுறை 2020 இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே இந்த ஆண்டில் (2024) இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையும் ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் கிரெட்டாவிற்கே அமோக வரவேற்பு இப்போதும் உண்டு. இது விற்பனைக்கு வந்து 8 வருடங்கள் மட்டுமே ஆகின்ற நிலையில் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்து பார்க்கையில் கிரெட்டா ஐந்து நிமிடங்களுக்கு ஒரு யூனிட் விற்பனையாகிக் கொண்டிருப்பது தெரிய வருகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 11, 2024, 19:48 [IST]
English summary
Hyundai creta n line launched in india it can touch 0 100 km speed with 9 seconds
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X