இந்த கார் ரோட்டுல போனா எல்லாரும் திரும்பி பாப்பாங்க! ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் வீடியோ ரிவியூ!
ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கிரெட்டா காரின் என்-லைன் வெர்ஷனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த கார் ரூபாய் 16.82 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது. மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி உள்ள நிலையில், பலர் இந்த கார் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு இந்த ஹூண்டாய் கிரெக்டா காரை ஓட்டி பார்க்க அழைப்பு வந்திருந்தது. அதன் பேரில் எங்கள் குழுவினர் டெல்லிக்கு பயணப்பட்டு இந்த காரை ஓட்டி பார்த்தனர். எங்களது டிரைவிங் அனுபவம் எப்படி இருந்தது? இந்த காரில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் புதிதாக உள்ளன? மக்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெளிவாக வீடியோவாக வெளியிட்டுள்ளோம்.
ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரை பொறுத்தவரை பழைய ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் அப்படியே இருக்கிறது. என்-லைன் காருக்கு என புதிதாக ஸ்டேரிங் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப் சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் பழைய காரை விட கொஞ்சம் ஸ்டிஃப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங்கும் சுலபமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மற்றபடி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்ஃலிப்ட் காரில் உள்ள அதே அம்சங்கள் தான் இந்த காரிலும் இடம் பெற்றுள்ளது. விலையை பொறுத்த வரையிலும் ஹூண்டாய் கிரெக்டா ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையை விட ரூபாய் 30,000 தான் அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








