இந்த காருக்கு இவ்வளவு டிமாண்டா? இப்ப புக் பண்ணா எப்ப கிடைக்கும் தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் வரும் 11-ம் தேதி தனது கிரெக்டா என்-லைன் காரை அறிமுகப்படுத்தப் போகிறது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் கலர் ஆப்ஷன்கள் வேரியண்ட் விபரங்கள் மற்றும் காத்திருப்பு காலங்கள் குறித்த தகவல்களை எல்லாம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை எல்லாம் காண்போம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காரை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த கார் தற்போது விற்பனையில் இருக்கும் நிலையில் வரும் 11-ம் தேதி இந்த கிரெக்டா காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய என்லைன் காரில் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஸ்போர்ட்டியான லுக் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிக சத்தம் வரும் அளவுக்கு எக்ஸாஸ்ட் செட்டப் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு உள்ளே சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக என்-லைன் பேட்ஜிங் மற்றும் ஸ்போர்ட்டியான சில விஷயங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த காருக்கான புக்கிங் ஏற்கனவே துவங்கி விட்டது. இந்த கார் மொத்தம் என்8 மற்றும் என்10 ஆகிய இரண்டு விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரை வெறும் ரூபாய் 25,000 கொடுத்து முன்பதிவு செய்ய முடியும்.
தற்போது இந்த காருக்காக பரபரப்பான முன்பதிவுகள் எல்லாம் நடந்துவரும் நிலையில், தற்போது இந்த காரை புக் செய்தால் எப்பொழுது இந்த கார் டெலிவரி கிடைக்கும்? அதாவது இந்த காருக்கான காத்திருப்பு காலம் என்ன? என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த கார் வரும் 11ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், வரும் 15ஆம் தேதி முதல் தான் இதன் டெலிவரி என்பது துவங்குகிறது. அதனால் இப்பொழுது நீங்கள் இந்த காரை புக் செய்தால் சில நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
தற்போது ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா என்-லைன் காருக்கு காத்திருப்பு காலம் என்பது 6 முதல் 8 வாரங்கள் வரை இருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது நீங்கள் இன்று இந்த காரை புக் செய்தாலும் 48 நாட்களுக்குப் பிறகுதான் இந்த கார் உங்கள் கைக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக மற்ற கார்களை விட இந்த கார்களுக்கான காத்திருப்பு காலம் என்பது அதிகமாக இருக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா என்லைன் காரை பொருத்தவரை நிறுவனம் டபிள்யுஆர்சி வடிவமைப்பை இன்ஸ்பயர் செய்து வடிவமைத்துள்ளது. இது போட்டியான லுக்கை கொடுக்கிறது. இது மட்டுமல்லாமல் கார் பவர்ஃபுல் பெர்பார்மன்ஸை செய்யும் வெளிப்படுத்தும் வகையிலும் சிறப்பான டிரைவிங் அனுபவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரின் வெறுப்பு பகுதியில் கிரில் மற்றும் பம்பர்கள் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பின்பகுதியில் உள்ள பம்பர் ஸ்போர்ட்டி லுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் ஆகிய பகுதிகளில் பெரிய அளவு மாற்றங்கள் எதுவும் இல்லை. பின்பக்க பம்பர் பகுதியில் மெயின் டிஃப்யூசர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஹூண்டாய் கிரெட்டா என்-லைன் காரை பொருத்தவரை 42 விதமான ஸ்டாண்டர்ட்டான பாதுகாப்பு அம்சங்களும் மற்றும் எழுவதற்கும் அதிகமான அட்வான்ஸான பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஏர் பேக்குகள் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்டு, ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
இந்த புதிய கிரெக்டா என்-லைன் காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 160 எச்பி பவரையும் 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற காராக இருக்கிறது. இந்த காரின் வெர்ஷன் அறிமுகமாவது அதன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காரில் உள்ள புதிய அப்டேட்டுகள் மற்றும் புதிய அம்சங்கள் எல்லாம் அவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனாலேயே இதன் புக்கிங் தற்போது அதிகமாகியுள்ளது. அதனால் காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









