ரூ50,000 சம்பளம் வாங்குனா ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க முடியுமா? இஎம்ஐ எவ்வளவு கட்டணும் தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். பலர் இந்த காரை வாங்கும் கனவுடன் இருக்கிறார்கள் மக்களை ஈர்ப்பதற்காக ஹூண்டாய் நிறுவனமும் இந்த காரை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரை வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் இருக்க வேண்டும் என்ற ஒரு சிறிய கணக்கீடை தான் இங்கே காணப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெக்டா விற்பனை செய்து வரும் நிலையில் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இந்த கார் இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரின் லுக் மட்டும் பெர்ஃபார்மென்ஸிற்க்கு ரசிகர்களாக மாறி இந்த காரின் விற்பனையை அதிகரிக்க செய்து வருகிறார்கள்.

இதற்காக நாம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெக்டா காரின் இ வேரியண்ட்டை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்த கார் ரூபாய் 10.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் நிலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை ஆன்-ரோடில் வாங்க வேண்டும் என்றால் ரூ 12.80 லட்சம் செலவு செய்ய வேண்டியது இருக்கும்.
இந்த காரை வாங்க வேண்டுமென்றால் அதற்கு இஎம்ஐ எப்படி கணக்கு செய்ய வேண்டும். இவ்வளவு கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு கடன் வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட வருமானம் தேவைப்படும். இப்படி நமக்கு எவ்வளவு சம்பளம் இருந்தால் இந்த காரை பெற லோன் கிடைக்கும் என்ற விபரங்களை பார்ப்போம்.

இந்த காரை வாங்குவதற்கு நீங்கள் முன் பணமாக ரூபாய் 1.5 லட்சம் செலவு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். பாக்கி உள்ள 11.30 லட்சத்தை நீங்கள் கடனாக பெறுகிறீர்கள் என்றால் அந்த கடனுக்கு 9.8 சதவீத வட்டி என கணக்கிட்டு நான்கு ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது மாதம் ரூபாய் 28,000 நீங்கள் இஎம்ஐயாக செலுத்த வேண்டும்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகள் இந்த இஎம்ஐ செலுத்தும் போது தான் உங்களுக்கு முழுமையாக இந்த கார் சொந்தமாக இருக்கும். உங்களுக்கு இவ்வளவு கடன் வழங்க வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 80 முதல் 90 ஆயிரம் வரை சம்பளம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு இந்த தொகையை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாக வழங்கும்.

இதனால் சாதாரணமாக ரூ50 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களால் இந்த காரை சொந்தம் ஆக்கிக் கொள்ள முடியாது. அவர்களுக்கு கூடுதல் வருமானம் இருந்தால் மட்டுமே இந்த காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். அப்படி இந்த காரில் என்ன அம்சங்கள் இருக்கிறது? ஏன் இந்த கார் அதிக விலையில் இருக்கிறது? மக்கள் ஏன் விரும்புகிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த காரை பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரில் லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, முன் பக்க டிரைவர் சீட் பவர் சீட்டாகவும், முன்பக்க சீட்டுகள் வெண்டிலேட்டட் சீட்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் தொழிற்நுட்பத்துடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. போட்டி நிறுவனங்களின் கார்களில் உள்ள அம்சங்கள் எல்லாம் இந்த காரிலும் இருக்கிறது. இதுபோக பல கூடுதல் அம்சங்களும் உள்ளன.
மேலும் இந்த காரில் 70 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இதனால் இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. இதனால் இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கார் மட்டுமல்லாமல் மற்ற கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. ஒட்டுமொத்தமாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் மத்தியில் தற்போது வருமானம் அதிகமாகியுள்ளது. கார் வாங்கும் அளவிற்கு அவர்கள் பொருளாதார வசதி பெற்று வருகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தொழில் வளம் அதிகரித்து வருகிறது வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. அதனால் இந்தியாவில் கார் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது இதனால் இந்தியா உலகில் மிகப்பெரிய கார் மார்க்கெட் உருவாக்கி உள்ளது. இந்திய மக்கள் வீட்டில் கட்டாயம் கார் இருக்கும் என்ற சூழ்நிலை விரைவில் வரும்.


Click it and Unblock the Notifications









