டாடா எல்லாம் ஓரமா போ! ஹூண்டாய் கிரெட்டா காரில் இவ்வளவு பாதுகாப்பு அம்சம் இருக்குதா?
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர் அந்த கார் பாதுகாப்பான காரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். மார்க்கெட்டில் டாடா நிறுவனத்தின் கார்கள் தான் பாதுகாப்பான கார்களாக இருப்பதாக பேச்சு நிலவுகிறது நம்பி வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கான விளக்கத்தை தான் இங்கே நாங்கள் கொடுக்கப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இந்த கிரெட்டா கார் தான் இருக்கிறது. நீண்ட ஆண்டுகளாக நல்ல விற்பனையில் இருக்கிறதே இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் வடிவமைப்பும் இதில் உள்ள அம்சங்களும் தான். என்னதான் மக்கள் விருப்பத்தை பெற்ற காராக இருந்தாலும் இதை வாங்கும் மக்களுக்கு இதன் பாதுகாப்பு அம்சம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது.

மார்க்கெட்டில் பொதுவாக டாடா நிறுவனத்தின் கார்கள் தான் பாதுகாப்பான கார்கள் என்ற பேச்சு நிலையை வருகிறது. இதனால் ஹூண்டாய் இடத்தில் இந்த கார் பாதுகாப்பு இல்லாத காராக இருக்கலாமோ என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெக்டா காரும் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இருக்கிறது. இந்த பாதுகாப்பு அம்சங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
அதிகமான அட்வான்ஸ்டு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது. இதில் முக்கியமாக ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வேரியன்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இது காரில் பயணிக்கும் பயணிகளுக்கு மிக பாதுகாப்பான ஒரு விஷயமாக இருக்கும். இதுபோக 19 அம்சங்கள் நிறைந்த அடாஸ்-2 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது கார் விபத்தில் சிக்காமல் தவிர்க்க பல்வேறு விதமான தொழில்நுட்ப வசதிகளை ஒன்றிணைத்து செயல்படும்.

முக்கியமாக இந்த காரில் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆட்டோ கோல்டு வசதியுடன் இருக்கிறது. அதாவது காரை நீங்கள் பார்க்கிங்கில் நிறுத்தும்போது பார்க்கிங் லிவரை பிடித்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பட்டனை அழுத்தினால் எலெக்ட்ரானிக் முறையில் பார்க்கும் பிரேக் பிடிக்கும். இதனால் காரை பார்க்கையில் விட்டு செல்லும்போது நீங்கள் பிரேக் லிவர் குறித்த கவலையை பட வேண்டிய தேவை இல்லை.
அதே நேரம் இந்த எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மலைப்பகுதிகளில் ஏற்றமாகவோ இரக்கமாகவோ இருக்கும் இடத்தில் வாகனம் நிற்கும் போது பயன்படுத்த சுலபமாக இருக்கும். இதுபோக டயர் பிரஷர் சிஸ்டம் இருக்கிறது. உங்கள் காரின் எந்த டயரில் காற்றின் அளவு குறைவாக இருந்தாலும், உடனடியாக அதை மானிட்டர் செய்து டிரைவரின் டேஷ் போர்டுக்கு தெரியப்படுத்தி விடும். இதனால் கார் பஞ்சர் ஆனால் உடனடியாக டிரைவருக்கு தெரியும்.

ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கண்ட்ரோல் என்ற அம்சமும் இந்த காரில் இருக்கிறது. அதாவது மலைப்பகுதிகளில் ஏற்றமான இடத்தில் கார் நிற்கும்போது கார் ஆஃப் ஆகிவிட்டால் மீண்டும் அதை ஸ்டார்ட் செய்யும் போது கார் பின்னால் வராமல் பிரேக்காகி நிற்பதற்காக தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
இது போக இந்த காரில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் அம்சம் பொருத்தப்பட்டுள்ளது. கார் வேகமாக வந்து திருப்பத்தில் திருப்பும் போதும் ஸ்டேபிளாக இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கார் ஸ்கிட்டாகாமல் தொடர்ந்து பயணிக்க முடியும்.
இதனால் இரவு நேரங்களிலோ அல்லது இருள் சூழ்ந்த பகுதிகளில் நீங்கள் செல்லும் போது உங்கள் ஹெட் லைட்டுகளை டிரைவர் தான் ஆன் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஹெட் லைட் தானாக ஆன் ஆகிவிடும். இதனால் டிரைவர் இன்புட் இல்லாமலேயே ஹெட்லைட்டை இயக்க முடியும்.
இதுபோக இந்த காரில் முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாத்திங் செய்யும்போது முன்பக்கம் ஏதாவது பொருள் இருந்தால் உடனடியாக டிரைவருக்கு அதை அச்சுறுத்தும் வகையில் சத்தம் எழுப்பும். இதனால் முன்பக்க மோதாமல் சுலபமாக பார்க்கிங் செய்ய முடியும். இதுபோக இந்த காரில் முன்பக்க கொல்யூஷன் அசிஸ்டென்ட் இருக்கிறது.
அதாவது கார் பயணிக்கும் போது காரின் முன் பக்கம் வேறு கார் பயணித்தாலும், வேறு மனிதர்கள் பயணித்தாலும் சைக்கிள் செல்லும் நபர் பயணித்தாலும், கார் திரும்பும் போது பக்கவாட்டில் இருந்து வரும் கார் குறுக்கே வந்தாலும் உடனடியாக இது காரின் வேகத்தை கட்டுப்படுத்தி அந்த விபத்தை தவிர்க்க உதவும்.
பிளைன்ட் ஸ்பாட் சொலுஷன் மார்னிங் என்ற சிஸ்டமும் இந்த காரில் இருக்கிறது. காலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது டிரைவரின் பிளைன் ஸ்பாட் பகுதியில் வேறு வாகனம் வரும்போது நீங்கள் காரை திருப்பி விபத்தில் சிக்க முயற்சி செய்தால் உடனடியாக உங்களை எச்சரித்து விபத்தை தவிர்க்க உதவும். அதேபோல லேண் கீப்பிங் அசிஸ்ட் என்ற தொழில்நுட்பம் இருக்கிறது. நீங்கள் பயணிக்கும் லெனின் தொடர்ந்து பயணிக்கவும் இது உதவுகிறது.
மேலும் இந்த காரில் லேண்ட் டிபார்ச்சர் வார்னிங் என்ற அம்சமும் இருக்கிறது. இதனால் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் லேனில் இருந்து நீங்கள் வேறு லேனிற்கு மாறுகிறீர்கள் என்றால் உடனடியாக உங்களை எச்சரிக்கும் வகையில் இந்த கருவி செயல்படும் ஹைபீம் அசிஸ்ட் இருக்கிறது. நீங்கள் சாலையில் செல்லும்போது உங்களுக்கு எதிரே வாகனம் வந்தால் தானியங்கியாக ஹெட் லைட் மாறிக் கொள்ளும் வசதி இந்த காரில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெக்டா காருக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காரின் விற்பனையும் சிறப்பாக இருக்கிறது. பலர் டாடா நிறுவனத்தின் கார்கள் மட்டும்தான் பாதுகாப்பான கார்களாக இருக்கும் என்ற தவறான கருத்துக்களை வைத்திருக்கிறார்கள். டாடா நிறுவனத்தின் கார்களும் தரமான காரர்களாக உள்ளன. அதே நேரம் ஹூண்டாய் நிறுவனத்தின் தரமான காராகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications









