ரோட்டுல வத வதன்னு இந்த கார் தான் ஓடுது! ஆனா இன்னும் சேல்ஸ் நிக்காம போயிகிட்டே இருக்குது!

ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 15,447 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த 2023 ஏப்ரல் மாதம் விற்பனையை காட்டிலும் எவ்வளவு அதிகமாக உள்ளது? இதன் விற்பனை விபரங்கள் குறித்த முழுமையான தகவல்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் நீண்ட ஆண்டுகளாக மக்கள் நன்மதிப்பைப் பெற்ற காராக இருக்கிறது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் இந்த காரின் விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களில் இந்த கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

hyundai creta sales

ஹூண்டாய் நிறுவனத்தின் கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 15447 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 16,186 வாகனங்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 1261 வாகனங்கள் விற்பனையாகி 8.89 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது. இது ஒரு சிறப்பான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த எஸ்யூவி கார்களின் விற்பனையிலும் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதிகமாக விற்பனையாகவும் எஸ்யூவி கார்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக விற்பனையான எஸ்யூவி கார்களில் 12.23 சதவீத பங்கை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் வைத்துள்ளது. இது எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை இந்த கார் பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது.

hyundai creta sales

இதே விற்பனையை கடந்த மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது கடந்த மார்ச் மாதம் மொத்தம் 16,458 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. ஏப்ரல் மாத விற்பனையுடன் அதை ஒப்பிட்டால் 1100 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 6.14 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருந்தாலும் இது பெரிய அளவிற்கான வீழ்ச்சி இல்லை என கூறலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை பொருத்தவரை மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மற்றும் ஒரு டீசல் இன்ஜின் உடன் விற்பனைக்கு வருகிறது. அதன்படி 1497 சிசி மற்றும் 1482 சிசி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் 1493 சிசி இன்ஜின் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் விற்பனையில் உள்ளன. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

hyundai creta sales

இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 1433 மிமீ நீளமும் 1790 மிமீ அகலமும் 2610 மிமீ வீல் பேஸூம் கொண்ட காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 5 சீட்டர் கொண்ட 4 சிலிண்டர் இன்ஜினுடன் கூடிய காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மொத்தம் 18 விதமான வேரியன்ட்களில் வெவ்வேறு இன்ஜின் மற்றும் கியர் ஆப்ஷன்களுடன் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 13.72 லட்சம் முதல் ரூபாய் 25.40 லட்சம் என்ற ஆன் ரோடு விலைக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த ஆன் ரோடு விலை என்பது சென்னையை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் ஒவ்வொரு நகரங்களை பொருத்தும் ஆன்ரோடு விலை என்பது மாறுபடும். மாநில வரிகள் இன்சூரன்ஸ் என அனைத்தும் சேர்த்து தான் ஆன் ரோடு விலை கணக்கிடப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரை மக்களுக்கு பிடித்த மாதிரி வடிவமைத்து தொடர்ந்து விற்பனை செய்து வருவதாலும், அடிக்கடி அதை அப்டேட் செய்து மார்க்கெட்டில் உள்ள போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு இணையான அம்சங்களை கொண்ட காராக உருவாக்கப்பட்டுள்ளதாலும், இந்த கார் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த கார் நல்ல விற்பனையை பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, May 16, 2024, 17:10 [IST]
English summary
Hyundai creta sales april 2024 know full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X