ஒரு கிமீக்கு 61 பைசா தான் செலவு! ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்குனா இவ்வளவு லாபமா?

ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை வாங்கிய பிறகு அதற்கு பராமரிப்பு செலவு எவ்வளவு ஏற்படும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். மற்ற கார்களை ஒப்பிடும்போது ஹூண்டாய் கிரெட்டா காரின் பராமரிப்பு செலவு என்பது குறைவாக தான் இருக்கும். பலருக்கு இது குறித்து தெளிவான புரிதல் இல்லை அவர்களுக்கான புரிதலை வழங்கவே இந்த பதிவை செய்துள்ளோம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் உள்ளன இரண்டும் 1.5 லிட்டர் அளவுள்ள இன்ஜின் திறன் தான் இந்த இரண்டிற்கும் ஒரே மாதிரியான பராமரிப்பு செலவுதான் கிட்டத்தட்ட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் 20 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை இலவச சர்வீஸ் வழங்கி வருகிறது. அதற்குப் பிறகு செய்யப்படும் சர்வீஸ்களுக்கு கட்டணம் வசூலிக்கிறது.

hyundai creta maintenance cost

முதலில் நாம் பெட்ரோல் இன்ஜின் வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகளை விரிவாக காண்போம். வாகனம் வாங்கிய முதல் இரண்டு மாதம் அல்லது 1500 கிலோ மீட்டர் வரை ஒரு ரூபாய் கூட சர்வீஸ் கட்டணமாக செலுத்த வேண்டியதில்லை. இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

வாகனம் வாங்கிய முதல் ஆண்டு அல்லது 10,000 கிலோ மீட்டர் ஓடிய பிறகு வாகனத்திற்கு இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில் பில்டர், ஆகியவற்றை பணம் செலுத்தி மாற்ற வேண்டியதற்கும் இதற்காக ரூபாய் 2171 பணத்தை கையிலிருந்து செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

hyundai creta maintenance cost

அடுத்ததாக இரண்டு ஆண்டுகள் அல்லது 20 ஆயிரம் கிலோமீட்டர் வரை ஓடிய பிறகு இன்ஜின் ஆயில், இன்ஜின் பில்டர் உடன் சேர்த்து கேபின் ஏசி பில்டரையும் மாற்ற வேண்டியது இருக்கும். இதற்காக மொத்தம் ரூ 2641 செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

மூன்று ஆண்டுகள் அல்லது 30,000 கிலோ மீட்டர் வாகனம் ஓடிய பிறகு இலவச சர்வீஸ் என்பது முடிந்துவிடும். அதனால் கட்டண சர்வீஸ், ஏர் ஃபில்டர், இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில், ஃபில்டர் , பிரேக் ஆயில் ஆகியவற்றை மாற்ற வேண்டும். இதற்கு ரூபாய் 5840 செலவாகும்.

hyundai creta maintenance cost

அடுத்து நான்காண்டுகள் அல்லது ரூ40,000 கிலோ மீட்டருக்கு பிறகு சர்வீஸ் கட்டணம் இன்ஜின் ஆயில் இன்ஜின் ஆயில் பில்டர், கேபின் ஏசி பில்டர், ஆகியவற்றை மாற்ற வேண்டும். இதற்கு ரூ 5,617 செலவாகும். 5 ஆண்டுகள் அல்லது 50,000 கிலோமீட்டருக்கு பிறகு சர்வீஸ் கட்டணம் இன்ஜின் ஆயில் இன்ஜின் ஆயில், பில்டர், எஞ்சின் கூலண்டையும் மாற்ற வேண்டும். இதற்கு 6,332 செலவாகும்.

அடுத்ததாக ஆறு ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பிறகு சர்வீஸ் கட்டணம் இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில் பில்டர், ஸ்பார்க் பிளக், மற்றும் பிரேக் ஆயில் ஆகியவற்றை சேர்த்து மாற்ற வேண்டும். இதற்கு ரூ 9,866 பணம் செலவாகும்.

hyundai creta maintenance cost

அடுத்ததாக ஏழு ஆண்டுகள் அல்லது 70 ஆயிரம் கிலோ மீட்டருக்கு பிறகு சர்வீஸ் கட்டணம் இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில் பில்டர், இன்ஜின் கூலன்ட் ஆகியவற்றை மாற்ற வேண்டும். இதற்கு மொத்தம் ரூபாய் 6332 பணம் செலவாகும். இது கணக்கிடும் போது குறைவான செலவு தான்.

அடுத்து 8 ஆண்டுகள் அல்லது 80 ஆயிரம் கிலோ மீட்டரை பொருத்தவரை சர்வீஸ் கட்டணம், இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில் பில்டர், அனைத்தும் சேர்த்து ரூபாய் 5617 செலவாகும். 9ம் ஆண்டு அல்லது 90 ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கும் போது, சர்வீஸ் கட்டணம் ஏர் ஃபில்டர், இன்ஜின் ஆயில், இன்ஜின் ஆயில் பில்டர், கூலன்ட் பிரேக் ஆயில் அனைத்தையும் மாற்ற வேண்டும். இதற்கு ரூபாய் 7025 செலவாகும்.

hyundai creta maintenance cost

இறுதியாக 10ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டரை பொறுத்தவரை சர்வீஸ் கட்டணம், இன்ஜின் ஆயில், ஏர் ஃபில்டர், கேபின் ஏசி பில்டர், ஆகியவற்றை மாற்ற வேண்டும். இதற்கு ரூபாய்5617 செலவாகும். இதுதான் இந்த காரின் ஒட்டுமொத்த பராமரிப்பு செலவு என்பது காரில் இடையில் பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் சரியாக வாகனத்தை இயற்றினால் மற்ற எந்த விதமான செலவையும் நீங்கள் செய்ய வேண்டியது இல்லை. இதை செய்தாலே கார் சிறப்பாக இயங்கும்.

இதை கணக்கு செய்து பார்க்கும்போது ஒரு லட்சம் கிலோ மீட்டருக்கு சர்வீஸ் கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு நீங்கள் 61 பைசாவை செலவு செய்தாலே முறையான பராமரிப்பு செலவை நீங்கள் சரி செய்து விட முடியும். அடுத்ததாக நாம் டீசல் வாகன சர்வீஸ் விவரங்களை பற்றி பார்ப்போம். மூன்று ஆண்டுகள் வரை இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு சர்வீஸ் கட்டணம் செலுத்தினால் போதும்.

hyundai creta maintenance cost

டீசலை பொருத்தவரையும் முதல் இரண்டு மாதத்திற்கு சர்வீஸ் செலவு எதுவும் இல்லை. முதல் ஆண்டிற்கு பிறகு ரூபாய் 2,507, இரண்டாவது ஆண்டிற்கு பிறகு ரூபாய் 4,317, மூன்றாவது ஆண்டுக்கு பிறகு ரூபாய் 5,838, நான்காவது ஆண்டுக்கு பிறகு ரூபாய் 7,923 பணம் செலவு செய்ய வேண்டியது வரும்.

ஐந்தாவது ஆண்டுக்கு பிறகு ரூபாய் 6,668, ஆறாவது ஆண்டிற்கு பிறகு ரூபாய் 7,648 ஏழாவது ஆண்டிற்க்குப் பிறகு, ரூபாய் 6,668, எட்டாவது ஆண்டுக்கு பிறகு ரூபாய் 7,293, ஒன்பதாவது ஆண்டிற்கு பிறகு ரூபாய் 7,023 பத்தாவது ஆண்டிற்கு பிறகு ரூபாய் 7,293 கட்டணமாக செலவு செய்ய வேண்டியது இருக்கிறது.

டீசல் இன்ஜின் ஆப்ஷனிலும் 10 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் ஓட்டினால் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 63 பைசா பராமரிப்பு செலவாக எடுத்து வைக்க வேண்டும். இந்த தகவல் எல்லாம் ஹூண்டாய் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான்.

நீங்கள் வாகனத்தை வாங்கி பயன்படுத்தும் போது இதன் சர்வீஸ் கட்டணங்கள் உள்ளிட்ட பிற கட்டணங்களின் விலை மாறுபடலாம். அதே நேரம் உங்கள் வாகனத்தில் வேறு சில பிரச்சினைகள் அல்லது பராமரிப்பு குறைபாட்டில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் பாதிப்புகளுக்கு நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி அதை சரி செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டா காரை பார்க்கும்போது பலர் இது காஸ்ட்லியான கார் எதனால் இதை வாங்கி பராமரிப்பு செய்ய அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பில் இருப்பார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை. இந்த காரின் பராமரிப்பு செலவு குறைவு தான். டீசல் இன்ஜின் வாகனமாக இருந்தாலும், பெட்ரோல் இன்ஜின் வாகனமாக இருந்தாலும், நீங்கள் அதை பயன்படுத்தும் முறையைப் பொறுத்துதான் பராமரிப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2024, 15:39 [IST]
English summary
Hyundai creta service cost details for 10 years or 1 lakh kms
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X