புதுசா கார் வாங்குவதாக இருந்தால் இந்த கலரில் வாங்கனும்! நீங்க தான் அதுக்கு செலவு பண்ணனும்!!

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் மிக பிரபலமான ஹூண்டாய் கார். தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரம் கிரெட்டா கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய கிரெட்டா கார் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை இங்கு ஒருவர் கண்ணை பறிக்கக்கூடிய நீல நிறத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார். அந்த கிரெட்டா காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் 4.4 மீட்டர் நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி கார், கிரெட்டா ஆகும். 2015ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரை பல்வேறு நிறங்களில் சாலையில் பார்த்திருப்பீர்கள். சில கிரெட்டா கார்கள் மாடிஃபிகேஷன் கூட செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு பஞ்சமா என்ன...

hyundai creta in blue colour

ஆனால், நீல நிறத்தில் ஹூண்டாய் கிரெட்டா காரை பார்த்திருக்கீர்களா? இங்கு ஒரு கிரெட்டா கார் பளிச்சிடும் நீல நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த கார் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், நீல நிறத்திலான கிரெட்டா கார் சாலையில் இயங்குவது காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், பாலத்தில் கார் செல்வதாலும், காரின் நம்பர் பிளேட் இல்லாததாலும் இந்த நீல நிற கிரெட்டா கார் எந்த பகுதியை சேர்ந்தது என்பதை கண்டறிய முடியவில்லை.

காரின் உடல் நிறத்திற்கு ஏற்ப, முன்பக்கத்தில் கிரில் பகுதி பளபளக்கும் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் லோகோவும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், காரின் அலாய் சக்கரங்களும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அலாய் சக்கரங்களில் சுழல் பேட்டர்னில் டிசைன் கொடுக்கப்பட்டு இருக்க, சக்கர ரிம்களில் பச்சை நிறத்திலான எலிமெண்ட்களை பார்க்க முடிகிறது.

hyundai creta in blue colour

காரின் முன்பக்க பில்லர்களும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், மேற்கூரை அந்தரத்தில் மிதப்பது போன்று உள்ளது. வீடியோவில், இந்த நீல நிற கிரெட்டா காரின் பின்பகுதியை பார்க்க முடியவில்லை என்றாலும், மேற்கூரையில் பொருத்தப்பட்ட பெரிய அளவிலான ஸ்பாய்லரை கொஞ்சம் காண முடிகிறது. வேலைப்பாடுகள் குறைவாக இருந்தாலும், இந்த நீல நிற கிரெட்டா கார் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.

இந்தியாவில் காரை தனது விருப்பத்திற்கு மாடிஃபை செய்து கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், காரின் நிறத்தை மாற்றிக் கொள்வதற்கு இல்லை. இருப்பினும், காரின் நிறத்தை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். காரின் நிறத்தை மாற்றிய பின்னர், காரை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டுவர வேண்டும். அங்கு காரை சில புகைப்படங்கள் எடுப்பர்.

அதன்பின்னரே, காரின் ஆர்டிஓ சான்றிதழில் புதிய நிறத்தின் பெயர் மாற்றப்படும். காரின் நிறத்தை மாற்றுவதற்கு இதுதான் முறையான வழி ஆகும். இதில் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும். ஹூண்டாய் கிரெட்டா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மார்க்கெட்டில் இந்த கார் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிரெட்டா கிடைக்கிறது. இந்த என்ஜின்களுள் ஒன்றை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். கிரெட்டா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.20.30 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கிரெட்டா கார் இந்த நீல நிறத்தில் உண்மையில் மிக அருமையாக உள்ளது. அதுவும், மேம்படுத்தப்பட்ட 2024 ஹூண்டாய் கிரெட்டா கார் பார்ப்பதற்கு இன்னும் ஸ்டைலாக இருக்கிறது. இவ்வாறான நீல நிறத்தில் கிரெட்டா காரை சாலையில் நீங்கள் பார்த்திருக்கீர்களா? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 8, 2024, 9:30 [IST]
English summary
Hyundai creta suv in bright blue colour instagram video check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+