இந்த ஒரு காரை புக் பண்ணிட்டு 30 ஆயிரம் பேரு காத்திருக்காங்களா!.. கொரிய தயாரிப்புனாலே தனி மவுசுதான் போலையே!!
2024 மே மாதத்தில் விற்பனையான வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை ஒவ்வொரு கார் உற்பத்தியாளர்களும் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai)-ம் சமீபத்தில் அதன் 2024 மே மாத கார் சேல்ஸ் பற்றிய புள்ளி விபரங்களை வெளியிட்டது. இதன்படி, 2023 மே மாதத்தைக் காட்டிலும் 2024 மே மாதத்தில் ஹூண்டாய் 1.13 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 49 ஆயிரத்து 151 யூனிட் வாகனங்களையே நடந்து முடிந்த மே மாதத்தில் விற்பனைச் செய்திருக்கின்றது.
இதைத்தொடர்ந்து மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலையும் ஹூண்டாய் தற்போது வெளியிட்டு உள்ளது. அதாவது, தன்னுடைய குறிப்பிட்ட கார் மாடல் ஒன்றிற்கு 32 ஆயிரத்திற்கும் அதிகமாக புக்கிங் நிலுவையில் இருப்பதாக அது தெரிவித்தது. அதாவது, ஹூண்டாயின் ஒரே ஒரு தயாரிப்பை மட்டும் 32 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் புக் செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அதேவேளையில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பெண்டிங் ஆர்டர் 65 ஆயிரமாக உள்ளது. இந்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது வேறு எந்த கார் மாடலும் இல்லைங்க, நிறுவனத்தின் புகழ்மிக்க எஸ்யூவி ரக கார் மாடலான கிரெட்டா-வே அதுவாகும். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி கார் என்பதை விற்பனை வாயிலாகவும், பெண்டிங் ஆர்டர் வாயிலாகவும் இந்த கார் உறுதிப்படுத்தி இருக்கின்றது.
குறிப்பாக, கிரெட்டா எஸ்யூவி-யில் விற்பனைக்குக் கிடைக்கும் கிரெட்டா என் லைன் (Creta N Line) தேர்விற்கு மிக சிறப்பான டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. வழக்கமான கிரெட்டாவைக் காட்டிலும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதே கிரெட்டா என் லைன் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு சுமார் 10 வாரங்கள் காத்திருப்பு காலம் நிலவுவதாகவே நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கிரெட்டா என் லைன் நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ரூ. 16.82 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய அதிக விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்ற போதிலும் இந்தியர்கள் பலர் இந்த காரை தேடி சென்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் தேர்வில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டுவிதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இதில் வழங்கப்படுகின்றது.
இந்தியர்கள் மத்தியில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி-க்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைக்க அதில் வழங்கப்பட்டு இருக்கும் அதிக பிரீமியம் அம்சங்களும் முக்கிய காரணமாக உள்ளது. லெவல் 2 வகை அடாஸ் (ADAS) அம்சம், 360 டிகிரி கேமிரா, பிளைன்ட் ஸ்பாட்டைக் காண உதவும் கண்ணாடி, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், காற்றோட்டத்தை வழங்கும் இருக்கை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர இன்னும் பல மனம் கவர் அம்சங்களையும் ஹூண்டாய் கிரெட்டா கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியர்களை தன் பக்கம் அந்த கார் வாரி சுருட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த காரின் வழக்கமான தேர்வை ரூ. 11 லட்சத்தில் இருந்தே வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் மிகவும் ஃபேவரிட்டான எஸ்யூவி ரக காராக ஹூண்டாய் கிரெட்டா காட்சியளிக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் இந்த கார் மாடல் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. சென்ற மே மாத்தில்கூட இந்த கார் மாடல் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








