31 நாளில் 36 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! அப்படி என்ன கார் இது தெரியுமா?
மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் தான் இருக்கிறது. அதன் கிரெட்டா மாடல் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம், ஹூண்டாய் கிரெட்டா கார் 17,350 யூனிட்கள் விற்று, 23.38% வருடாந்திர வளர்ச்சியைக் பெற்றுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்ததுள்ளது. இருப்பினும், ஹூண்டாயின் எலெக்ட்ரிக் வாகனமான அயானிக் 5, விற்பனையில் முற்றிலும் மாறுபாட்டைக் கண்டது.
கடந்த ஜூலை மாதம், ஹூண்டாய் அயானிக் 5 கார் 36 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 125 வாடிக்கையாளர்களைக் பெற்றிருந்த நிலையில் அந்த மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது 71.20% சரிவை பிரதிபலிக்கிறது. விற்பனையில் இந்த வீழ்ச்சி இருந்தபோதிலும், அயானிக் 5 கார் ஈர்க்கக்கூடிய அம்சங்களை கொண்டுள்ளது, இது

ஹூண்டாய் அயானிக் 5 ஆனது சக்திவாய்ந்த 72.6கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் 217 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை கொண்டது. இந்த ரியர்-வீல் டிரைவ் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜில் 631கிமீ தூரம் பயணிக்கும். 150kWh சார்ஜரைப் பயன்படுத்தி வெறும் 21 நிமிடங்களில் 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் அல்லது 50kWh சார்ஜர் மூலம் ஒரு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
கேபினுக்குள், வாடிக்கையாளர்கள் இரண்டு ஒருங்கிணைந்த 12.3-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் அம்சங்களில் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், இரண்டு ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஆகியவை இதில் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பிற்காக, அயானிக் 5 காரில் ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS) தொழிற்நுட்பம் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 46.05 லட்சம். இந்த மாடலுக்கான நான்கு வெவ்வேறு கலர் ஆப்ஷன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.
ஹூண்டாய் கிரெட்டாவின் சீரான செயல்திறன், தொடர்ந்து மூன்று மாதங்கள் அதை முதலிடத்தில் வைத்துள்ளது. நம்பகமான எஸ்யூவிகளைத் தேடும் இந்திய நுகர்வோர் மத்தியில் அதன் புகழ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த செக்மெண்டில் கடும் போட்டியும் நிலவுகிறது.

ஹூண்டாய் அயானிக் 5 கார் அதன் சமீபத்திய விற்பனை எண்ணிக்கையில் சரிந்தாலும் மேம்பட்ட தொழிற்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிரைவிங் விருப்பங்களை வழங்குகிறது. அதன் சக்தி மற்றும் வரம்பு ஆகியவற்றின் கலவையானது எலெக்ட்ரிக் வாகன சந்தையில் வலுவான போட்டியாளராக தற்போது அமைகிறது.
ஹூண்டாயின் பல்வேறு வகையான வாகனங்கள் பல்வேறு வாடிக்கையாளர் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்கிறது, இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக அதன் நிலையை உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே இந்நிறுவனம் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற ஒரு நிறுவனமாக தற்போது மாறியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது குறைவான எண்ணிக்கையில் தனது அயானிக் 5 காரை விற்பனை செய்தாலும் அதன் மூலம் லாபம் தான் பார்க்கிறது. எலெக்டரிக் வாகன பிரிவில் தானும் காலடி தடத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களிலேயே தனித்துவமான அடையாளத்தை கொண்ட நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனம் மாறியுள்ளது. இந்த அயானிக் 5 காரின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் பலர் விரும்பி வாங்கி வருகின்றனர். அதற்கு அந்நிறுவனத்திற்கு இருக்கும் நன்மதிப்பும் முக்கியமான காரணம்.


Click it and Unblock the Notifications









