ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கும் முன்பு இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த காரை வாங்க மக்கள் பலர் ஆவலாக காத்திருக்கிறார்கள். பலர் இந்த காரை புக் செய்வதற்காக திட்டமிட்டு வருகிறார்கள். இப்படியாக காரை புக் செய்யும் முன் எந்த வேரியன்டை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கிறது இதனால் ஒவ்வொரு வேரியண்டிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
புதிதாக அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெக்டா காரை பொறுத்தவரை மொத்தம் இ, இஎக்ஸ், எஸ், எஸ் ஓ, எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டெக், எஸ்எக்ஸ் ஒ, ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகி வருகின்றன. இதில் ஒவ்வொரு வேரியன்டிலும், ஒவ்வொரு விதமான அம்சங்கள் இருக்கிறது. சில வேரியன்ட்களில் அதிகமான அம்சங்களும் சில வேரியன்ட்களில் குறைவான அம்சங்களும் உள்ளன. இதை விரிவாக பார்ப்போம்.

இதில் இ வேரியன்டை பொறுத்தவரை 16 இன்ச் வீல், புரொஜெக்டர் ஹெட்லைட், ஆறு ஏர்பேக்குகள், இஎஸ்பி யுடன் கூடிய ஏபிஎஸ், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பின்பக்க வீல்களுக்கு டிஸ்க் பிரேக்குகள், சென்ட்ரல் லாக்கிங், ரியர் பார்க்கிங் சென்சார், அனைத்து பயணிகளுக்கும் மூன்று பாயிண்ட் கொண்ட சீட்டு பெல்ட்டுகள், டூயல் டோன் இன்டீரியர்.
60க்கு 40 என்று பிரிக்கப்பட்ட பின்பக்க சீட்டுகள், பின்பக்க சீட்டுகளை சாய்த்து கொள்ள இரண்டு ஸ்டெப் சாய்வு வசதி, பின் பக்க சீட்டுகளுக்கு ஆர்ம் ரெஸ்ட், பின்பக்க ஏசி வெண்ட்கள், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பங்க்ஷன், கலர் இன்ஸ்ட்ரூமென்ட் ஸ்க்ரீன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

அடுத்ததாக இஎக்ஸ் வேரியன்டை பொறுத்தவரை இ வேரியன்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் இருக்கிறது. இது போக கூடுதலாக 8 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைமென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, முன் பக்கம் மற்றும் பின்பக்கம் பயணிகளுக்கான ஸ்பீக்கர்கள், ஸ்டேரிங்கிலேயே கண்ட்ரோல் செய்யக்கூடிய பட்டன்கள் ஷார்க்ஃபின் ஆன்டனா, எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் செய்யக்கூடிய ஓஆர்விஎம், மேப்லைட்டுகள், கூலிங் கிளாஸ்களை வைக்கக்கூடிய ஹோல்டர், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
அடுத்ததாக எஸ் வேரியன்டை பொறுத்தவரை எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட் , ஓஆர்விஎம் பகுதியில் எல்இடி இண்டிகேட்டர், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், பின்பக்க டிஃபாகர், பின்பக்க கேமரா, பின்பக்க சன் பிளைன்ட், க்ரூஸ் கண்ட்ரோல், பின்பக்க வைப்பர், லக்கேஜ் வைக்கக்கூடிய இடத்தில் கூல்டு கிளவ் பாக்ஸ் இதில் கூடுதலாக இருக்கின்றன.

அடுத்ததாக எஸ்ஓ வேரியன்டை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் முந்தைய வேரியண்ட் அம்சங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இதில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 17இன்ச் கொண்ட கருப்பு நிற அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங்பிரேக், டிரைவ்மோடுகள், பெடல்ஸ்விஃப்டர் ஆகியன ஆட்டோமேட்டிக் கியர்ஆப்ஷனில் மட்டும் வருகிறது. இதுபோக புஷ் ஸ்டார்ட் பட்டன் பின்பக்க ரீடிங்லைட்டுகள் இந்த வேரியன்டில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
அடுத்ததாகஎஸ்ஓ வேரியன்டை பொறுத்தவரை 17 இன்ச் கொண்ட ரேசர் கட் அலாய் வீல், 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, சீக்கோன்ஷியல் டர்ன் இன்டிகேட்டர், க்ரோம் நிறத்தில் வழங்கப்பட்டுள்ள டோர் ஹேண்டில், டூயல் டோன் கொண்ட எக்ஸ்டிரியர் கலர் அம்சங்கள்,
செமி லெதர் கொண்டு உருவாக்கப்பட்ட அப்ஹோல்சரி, ஸ்டேரிங் வீல் மற்றும் கியர் நாப்களை சுற்றி லெதர் விராப் செய்யப்பட்டுள்ளது. காரின் உட்புறம் ஆம்பியன்ஸ் லைட், வயர்லெஸ் சார்ஜிங், பின்பக்க சீட்டுகளுக்கான ஹெட் ரெஸ்ட் குஷன், வாய்ஸ் மூலம் இயக்கக்கூடிய சன்ரூஃப் ஆகிய அம்சங்கள் உள்ளன.
எஸ் எக்ஸ் டெக் வேரியன்டை பொறுத்தவரை பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அடாஸ் தொழில்நுட்பம் கொல்யூஷன் வார்னிங் அவாய்டன்ஸ், அடாப்டிங் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரின் பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக போஸ் ஆடியோ சிஸ்டம் ஆட்டோமேட்டிக் கியர் வேரியண்ட்களுக்கான பார்க்கிங் பிரேக், டிரைவ் மோடுகள், பெட்டல் ஸ்விஃப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக டாப் வேரியன்டை பொறுத்த வரை மற்ற அனைத்து அம்சங்களும் இடம்பெறும். இது போக கூடுதலாக எலெக்ட்ரோ குரோமிக் ஐஆர்விஎம், முன்பக்க பார்க்கிங் சென்சார், 360 டிகிரி கேமரா சிஸ்டம், பிளைன்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், எலெக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட் முன்பக்க வெண்டிலேட்டர் சீட்டுகள், முழு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெக்டா காரை வாங்க விரும்புபவர்கள் எந்த வேரியன்டை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். மேலே உள்ள பட்டியலை வைத்து உங்களுக்கு தேவையான அம்சங்கள் எது என்பதை கண்டறிந்து அந்த அம்சங்கள் இருக்கும் வேரியன்டை தேர்வு செய்வது தான் சிறந்தது. ஒவ்வொரு வேரியன்டிற்கும் விலை மாறுதல் ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









