இந்த காரை புக் பண்ணா கண்கள்ல பூவே பூத்திடும்போல! அவ்ளோ நாள் காத்திருக்கணும்.. இருந்தும் இதுதான் வேணும்ன்றாங்க!

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக கிரெட்டா இருக்கின்றது. இந்த எஸ்யூவி கார் மாடலை இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் என்றும் குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இந்தியர்கள் பலரின் மனம் கவர்ந்த கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இதற்கு சான்றாக கிரெட்டா அதிக எண்ணிக்கையில் சாலையில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது.

மேலும், இப்போதும் இதன் விற்பனை சூடுபிடித்தேக் காணப்படுகின்றது. இதன் விளைவாக கிரெட்டா காருக்கான காத்திருப்பு காலமும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இப்போது புக் செய்தால் அக்காரை கைகளில் பெற பல வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்கிற சூழலே நிலவுகின்றது. இந்த காத்திருப்பு காலம் பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி இருக்கின்றது. அதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Hyundai creta

ஹூண்டாய் கிரெட்டா பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் டீசல் எஞ்சினைக் கொண்ட தேர்வே மிக அதிக நாட்கள் காத்திருப்பு காலத்தைக் கொண்டிருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, ஹூண்டாய் கிரெட்டா டீசலை இப்போது புக் செய்தால் அதனைக் கைகளில் பெற குறைந்தது 4 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இதேபோல் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுக்கும் அதிக காத்திருப்பு காலமே நிலவுகின்றது. இதற்கு மூன்று மாதங்கள் தொடங்கி ஐந்து மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. குறிப்பாக, ஹூண்டாய் கிரெட்டாவின் உயர்நிலை தேர்வான எக்ஸ்எக்ஸ் (ஓ)-விற்கு மிகப் பெரிய டிமாண்ட் இந்தியர்கள் மத்தியில் நிலவுதாக கூறப்படுகின்றது.

இதேபோல், அபிஸ் கருப்பு நிற தேர்வையே இந்தியர்கள் அதிக அளவில் புக் செய்திருக்கின்றனர் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், ஹூண்டாய் கிரெட்டாவில் கருப்பு நிறத்திற்கும், டீசல் எஞ்சினுக்கும் மற்றும் எஸ்எக்ஸ்-ஓ தேர்விற்குமே மிக அதிக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது தற்போது வெளியாகி இருக்கும் தகவலின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இதனால், மற்ற வேரியண்ட் மற்றும் நிற ஆப்ஷன்களைக் காட்டிலும் இவற்றிற்கு கூடுதலாக காத்திருக்க வேண்டும் என்கிற சூழல் நிலவுகின்றது. ஹூண்டாய் கிரெட்டாவில் ஒரு டீசல் எஞ்சின் தேர்வும், இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே கிரெட்டாவில் வழங்கப்படுகின்றது.

இதில் அதிக பவரை வெளியேற்றும் மோட்டார் ஆப்ஷனாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இருக்கின்றது. இது அதிகபட்சமாக 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாருடன் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. அதேவேளையில், 1.5 பெட்ரோல் மோட்டாருடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

இது அதிகபட்சமாக 133 பிஎச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன். இவை இரண்டைக் காட்டிலும் சற்று குறைவான திறனையே டீசல் ஆப்ஷன் வெளியேற்றுகின்றது. அது அதிகபட்சமாக 114 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும். இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா கார் மாடலில் ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளை ஹூண்டாய் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், லெவல் 2 வகை அடாஸ் (ADAS) அம்சம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பிளைன்ட் ஸ்பாட்டைத் தெளிவாகக் காண உதவும் கண்ணாடி, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆம்பியன்ட் லைட், காற்றோட்டத்தை வழங்கும் இருக்கை மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் மாடல் ரூ. 11 லட்சம் தொடங்கி ரூ. 20.15 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இந்த விலையில் விற்கப்பட்டும் ஹூண்டாய் கிரெட்டாவிற்கு இந்தியாவில் அதிக மாதங்கள் காத்திருப்பு நிலவும் அளவிற்கு வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 19, 2024, 5:00 [IST]
English summary
Hyundai creta waiting period 4 to 5 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+