தண்ணீரே இல்லாமல் காரை சுத்தம் செய்யும் ஹூண்டாய்! எவ்வளவு தண்ணீரை மிச்சம் பண்ணாங்க தெரியுமா?

ஹுண்டாய் நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 கோடி லிட்டர் தண்ணீரை கார் கழுவுவதன் மூலம் மிச்சப்படுத்தி உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கார்களை சுத்தப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை பின்பற்றுவதன் மூலம் இவ்வளவு தண்ணீர் மிச்சப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 48 லட்சம் மக்கள் தங்கள் தினசரி அன்றாட தேவைக்கான தண்ணீரை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு காரை வாங்குவதைவிட பெரிய விஷயம் அந்த காரை முறையாக பராமரிப்பது தான். முக்கியமாக காரை அவ்வப்போது சுத்தப்படுத்தி வைத்துக்கொண்டால் தான் கார் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நீண்ட காலம் உங்களுக்கு உழைப்பை தரும். இதனால் காரை அவ்வப்போது வாட்டர் வாஷ் செய்ய பலர் நேரடியாக சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வார்கள். அங்கு காரை சுத்தப்படுத்தி தருவார்கள்.

hyundai dry wash

இப்படியாக ஒரு காரை சுத்தப்படுத்த சுமார் 120 லிட்டர் அளவிற்கு தண்ணீர் தேவைப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு. இனி இயற்கையை எந்த விதத்திலும் கெடுக்க கூடாது என்பதால் தண்ணீர் தேவையை குறைத்து. கார்களை தண்ணீரே இல்லாமல் எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து ஹுண்டாய் நிறுவனம் புதிய முன்னெடுப்பை கையில் எடுத்தது.

அதன் பிறகு ஹுண்டாய் நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள அதன் சர்வீஸ் சென்டர்களில் தண்ணீரே இல்லாமல் காரை சுத்தப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார்களை டிரை வாஷ் செய்து வந்தனர். சுமார் ஏழு ஆண்டுகளாக இது படிப்படியாக ஒவ்வொரு நகரங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது பெரும்பாலான ஹூண்டாய் ஷோரூம்களில் தண்ணீர் கொண்டு காரை சுத்தப்படுத்துவதில்லை.

இது குறித்து தற்போது அந்நிறுவனத்தின் சிஓஓ தருண் கார்க் ஒரு அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி அந்நிறுவனம் தற்போது தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்தியதால் சுமார் 65 கோடி லிட்டர் அளவிலான தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 55 லட்சம் கார்களை சுத்தப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

அந்நிறுவனம் சேமித்த தண்ணீரை கணக்கிட்டு பார்க்கும்போது 48 லட்சம் மக்களுக்கான தினசரி நீர் தேவையை அந்நிறுவனம் சேமித்த நீர் மூலம் வழங்க முடியும் என புதிய விபரம் ஒன்றையும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை எந்த விதத்திலும் கெடுக்காமல் அதே நேரத்தில் அவர்களது பராமரிப்பு பணியையும் செய்வதற்காக ஹூண்டாய் நிறுவனம் இந்த டிரைவாஷ் என்ற முறையை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்ல ஹூண்டாய் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மற்ற சில முன்னெடுப்புகளையும் கையில் எடுத்துள்ளது. டிரைவாஷ் சேவை மட்டுமல்லாமல் வாட்டர்பார்ன் பெயிண்ட் சிஸ்டம், பேப்பர் இல்லாத புராசெஸ், எல்இடி லைட், சோலாரைசேஷன், மழைநீர் சேமிப்பு, உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த தண்ணீர் இல்லாத சுத்தம் பண்ணும் டிரை வாஷ் சேவையை வாடிக்கையாளர்களும் விரும்புகிறார்கள். தண்ணீர் வைத்து சுத்தம் செய்தால் எந்த அளவுக்கு கார் சுத்தம் ஆகுமோ, அதைவிட சிறப்பாகவே இந்த டிரைவாஷ் சேவை மூலம் கார் சுத்தமாவதாக வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இதன் மூலம் இயற்கையை கெடுக்காத எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

வாகனத்தை தயாரிப்பதற்கு அதிகம் தண்ணீர் செலவாவது போல, வாகனத்தை கழுவுவதற்கு பல நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை வீணாக்கி வருகிறார்கள். தண்ணீர் என்பது மிக அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. இதனால் தண்ணீரை சேமிக்கும் பொருட்டு தண்ணீர் இல்லாத கார் வாஷ் சேவையை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குவதன் மூலம் சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தண்ணீர் இல்லாமல் காரை சுத்தப்படுத்துவது என்பது சாத்தியமா என்ற கேள்வி பலருக்குள் இருக்கும். இது உண்மையிலேயே சாத்தியம்தான். தண்ணீர் இல்லாமலேயே வாகனத்தை சுத்தப்படுத்த முடியும். இதற்கான தொழில்நுட்பம் எல்லாம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இருக்கிறது. இதை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் பல லட்சம் லிட்டர் தண்ணீரை நிச்சயம் மிச்சம் பண்ண முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 15:59 [IST]
English summary
Hyundai dry wash initiative saves 650m water five years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+