ஹூண்டாய் ஷோரூம்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் குவிய போகுது!! மே மாத சலுகைகளை வாரி வழங்கி இருக்காங்க!

ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு 2024 மே மாதத்திற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்டரை இந்த சலுகையின்படி எவ்வளவு குறைவான விலையில் வாங்கலாம் என்பதையும், இந்த ஹூண்டாய் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஹூண்டாய் இந்த 2024 மே மாதத்தை முன்னிட்டு அதன் குறிப்பிட்ட சில பிரபலமான கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, மே மாதத்திற்கான சலுகைகளை பெறும் ஹூண்டாய் கார்கள் ஐ20, கிராண்ட் ஐ10 நியோஸ், வென்யூ மற்றும் எக்ஸ்டர் ஆகும்.

hyundai exter 2024 may discount

இதில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் அதன் அறிமுகத்துக்கு பிறகு முதல்முறையாக சலுகையை பெற்றுள்ளது. ஹூண்டாய் அறிவித்துள்ள இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பிரேட் தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஆனால், எக்ஸ்டர் காருக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, எக்ஸ்டர் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் போனஸை மட்டுமே பெற முடியும். பழைய காரை கொடுத்து புதிய எக்ஸ்டர் காரை வாங்கும் கஸ்டமர்கள் பழைய காருக்கான மதிப்புடன் அதிகப்பட்சமாக ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை கூடுதலாக இந்த மே மாதத்தில் பெறலாம். இது எக்ஸ்டர் காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸ்டர் கார்கள் ஒவ்வொரு மாதத்திலும் தற்சமயம் சராசரியாக 8,000 கார்கள் விற்பனையாகுகின்றன. மொத்தம் 17 விதமான ட்ரிம் நிலைகளில் கிடைக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.13 லட்சத்தில் இருந்து ரூ.10.28 லட்சம் வரையில் உள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 83 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமின்றி, சிஎன்ஜி ஆப்ஷனிலும் எக்ஸ்டர் கார் விற்பனை செய்யப்படுகிறது. எக்ஸ்டர் சிஎன்ஜி காரில் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கும்.

hyundai exter 2024 may discount

மேலும், எக்ஸ்டர் சிஎன்ஜி காரை மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும். எக்ஸ்டரை காட்டிலும் அளவில் கொஞ்சம் பெரியதான ஹூண்டாய் வென்யூ காருக்கு ரூ.35,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.25,000 வரையிலான பணம் தள்ளுபடி, ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அடங்குகின்றன. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.48,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.3,000 மதிப்பிலான கார்ப்பிரேட் போனஸும் அடங்குகிறது.

ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் காருக்கு ரூ.45,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதனை வடக்கு, மேற்கு மற்றும் மத்திய இந்திய மாகாணங்களில் உள்ள கஸ்டமர்கள் மட்டுமே பெற முடியும். தென்னிந்திய மற்றும் கிழக்கிந்திய மாகாணங்களில் ஐ20 காரை வாங்குவோருக்கு ரூ.35,000 வரையிலான சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.

hyundai exter 2024 may discount

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் அதன் கார்களுக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலும் சலுகைகளை வழங்கியுள்ளது. வென்யூ காருக்கு கடந்த மாதத்தில் வழங்கிய ரூ.35,000 சலுகையை இந்த மே மாதத்திலும் ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்துள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 கார்களுக்கு கடந்த மாதத்தில் வழங்கியதை காட்டிலும் இந்த மாதத்தில் அதிக சலுகையை ஹூண்டாய் அறிவித்துள்ளது. ஆனால், இவை எல்லாவற்றையும் விட எக்ஸ்டர் காருக்கு முதன்முறையாக சலுகை வழங்கப்பட்டு இருப்பதுதான் இதில் சிறப்பானது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 22:57 [IST]
English summary
Hyundai exter car discount 2024 may check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X