வெளிநாட்டில் 2 பேரிடம் மட்டுமே இந்த காரை விக்க முடிஞ்சுது! இந்தியாவுல இதை வாங்க லைன்ல நிக்குறாங்க!

ஹூண்டாய் நிறுவனம் மினி எஸ்யூவி செக்மெண்டில் விற்பனை செய்து வரும் காராக எக்ஸ்டர் கார் இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் நல்ல பெயரை பெற்று சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. டாடா பஞ்ச் காருக்கு இந்த கார் கடும் போட்டியாக இருக்கிறது. விற்பனையில் டாடா பஞ்ச் கார் முதலிடத்தில் இருந்தாலும், ஹுண்டாய் எக்ஸ்டர் காருக்கு என்ற ரசிகர்கள் தனியாக இருக்கிறார்கள். விற்பனையாகும் டாப் 3 கார்களில் இந்த எக்ஸ்டர் காரும் இருக்கிறது. ஆனால் இந்த எக்ஸ்டர் கார் குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் எஸ்யூவி காரான பஞ்ச் காருக்கு போட்டியாக களமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விற்பனையாகி வருகிறது. கடந்த மே மாதம் மொத்தம் 7697 கார்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. அதிகமாக விற்பனையாகும் கார்களில் ஏழாவது இடத்தை இந்த கார் பிடித்துள்ளது. இது எல்லாம் இந்தியாவில் செய்யப்பட்ட விற்பனை நிலவரம் தான்.

hyundai exter export

ஹூண்டாய் நிறுவனம் இந்த எக்ஸ்டர் காரை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் கடந்த மே மாதம் இந்நிறுவனம் வெறும் இரண்டு கார்களை மட்டுமே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களிலேயே மிக குறைவான எண்ணிக்கையில் ஏற்றுமதியான கார் என்றால் அது இதுதான்.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் எண்ணிக்கையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஏற்றுமதியான கார் இது தான் மொத்தம் ஏற்றுமதியான 50 விதமான கார்களில் 50வது காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த கார் வெளிநாட்டில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தெரிகிறது.

hyundai exter export

ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பொருத்தவரை 5 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த கார்களின் பேஸிக் வேரியண்டிலேயே 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 எச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது.

இந்த எக்ஸ்டர் காரில் சிஎன்ஜி வேரியண்டையும் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இது 69 எச்பி பவரையும் 95.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனில் எஸ் மற்றும் எஸ் எக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்கள் மட்டுமே விற்பனையாகி வருகின்றன. இந்த காரின் விலை பொருத்தவரை ரூபாய் 6.13 லட்சம் என்று ஆரம்ப விலையில் இருந்து விற்பனையாகி வருகிறது.

hyundai exter export

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் தயாரிப்பு குறைவாக இருப்பதால் இந்தியாவிலேயே அந்த கார் அதிகமாக விற்பனையாகிறது. ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தயாராகவில்லை என நீங்கள் நினைக்க கூடாது. கடந்த மார்ச் மாதம் கூட ஹூண்டாய் எக்ஸ்டர் கார் 40 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஆனால் தற்போது வெறும் இரண்டு கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகி உள்ளது. நாளுக்கு நாள் ஏற்றுமதி என்பது சரிந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் இந்த காரை வாங்க ஏகப்பட்ட மக்கள் புக்கிங் செய்து காத்திருக்கிறார்கள் அந்த அளவுக்கு கூட தயாரிப்பு இல்லாத நிலையில் வெளிநாட்டுக்கு எப்படி ஏற்றுமதி செய்ய முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பொதுவாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் காரின் சிஸ்டம் போல இருக்காது. வெளிநாட்டிற்கு ஏற்றது போல் இதன் சிஸ்டத்தை மாற்றி தயாரிப்பார்கள்.

இப்படியாக மாற்றி தயாரிக்கும் போது ஒவ்வொரு மாதமும் அது தயாரிக்க தயாரிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் முயற்சி செய்யும். அதற்கான பணிகளை எல்லாம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 40 கார்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.

இந்த மாதம் அதன் ஏற்றுமதி எண்ணிக்கை குறைந்துள்ளதால் ஒன்று வெளிநாடுகளில் இந்த காருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இல்லாமல் இருக்கலாம். அல்லது வெளிநாடுகளுக்கு ஏற்ற காரை தயாரிப்பதில் ஹுண்டாய் நிறுவனத்திற்கு ஏதாவது சுணக்கம் ஏற்பட்டு இருக்கலாம். உண்மையான காரணத்தை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டால் மட்டுமே தெரியும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்திற்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு கூட வரவேற்பு இல்லாதது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. ஹுண்டாய் நிறுவனம் இந்த காரை வெளிநாட்டில் பெரிய அளவில் பிரபலப்படுத்தாததால் இந்த ஏற்றுமதி எண்ணிக்கை குறைவு ஏற்பட்டிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2024, 11:08 [IST]
English summary
Hyundai exter export only 2 units in may 2024
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X