28 கிமீ மைலேஜ்! பைக் வாங்கறதுக்கு பதிலா இந்த கார வாங்கீரலாம்! விலை தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது.
இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7,582 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த விற்பனை எண்ணிக்கையை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அப்போது இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கே வரவில்லை.

ஆம், ஹூண்டாய் எக்ஸ்டர் இந்திய சந்தைக்கு புதுவரவு ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இந்தியாவில் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மிக குறுகிய காலத்திலேயே இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஹூண்டாய் கார்களில் ஒன்றாக எக்ஸ்டர் மாறி விட்டது.
நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிகமாக விற்பனையான ஹூண்டாய் கார்களின் பட்டியலில் எக்ஸ்டர் 3வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. முதல் 2 இடங்களில் முறையே க்ரெட்டா (Creta) மற்றும் வெனியூ (Venue) ஆகியவை உள்ளன. இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் நிறுவனத்தை தாங்கி பிடிக்கும் இந்த 3 கார்களுமே எஸ்யூவி ரகத்தை சேர்ந்தவைதான்.

ஹூண்டாய் க்ரெட்டா, மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்தது. ஹூண்டாய் வெனியூ, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-4 Metre Compact SUV) ரகத்தை சேர்ந்தது. சரி, ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பற்றிய விஷயங்களுக்கு வருவோம். இது விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவும் எனவும், சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைவான விலை மற்றும் நிறைவான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்களுடன், 8 இன்ச் டச்ஸ்க்ரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், 6 ஏர்பேக்குகள் போன்ற பல்வேறு வசதிகளையும் (Features) ஹூண்டாய் எக்ஸ்டர் பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் எக்ஸ்டர் உள்ளது. வரும் காலங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








