இந்த ஹூண்டாய் காரை புக் செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ்... வீட்டிற்கு ஓட்டி செல்ல ரெடியாகுங்க!!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப கார் நிறுவனங்களும் புதியது, புதியதாக சிஎன்ஜி கார்களை மார்க்கெட்டில் களமிறக்கி வருகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி கார்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கடந்த சில வருடங்களில் பல்வேறு சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகபடுத்திய புதிய சிஎன்ஜி கார் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ (Exter Hy-CNG Duo) ஆகும். இந்த கார் தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது.

எஸ், எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ் நைட் எடிசன் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, இந்த சிஎன்ஜி காரை முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

exter hy-cng duo arrives showrooms

இந்த நிலையில்தான், புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், கருப்பு நிறத்திலான எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ காரை காணலாம். இந்த புதிய ஹூண்டாய் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.8.5 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட் ஸ்பேஸில் சிஎன்ஜி சிலிண்டரை இரண்டாக சிறிய அளவில் வழங்குகிறது. இதன் விளைவாக, காரின் பூட் ஸ்பேஸில் பொருட்களை வைக்க கூடுதல் இடவசதி கிடைக்கிறது. இதே பாணியை பின்பற்றி, ஹூண்டாய் நிறுவனமும் அதன் புதிய எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி காரில் ட்வின் சிஎன்ஜி சிலிண்டர் டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளது.

exter hy-cng duo arrives showrooms

ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ காரில் 30 லிட்டர் கொள்ளளவில் இரு சிஎன்ஜி டேங்குகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு சிலிண்டர்களை இரண்டாக வழங்குவதால், அவை இடத்தை ஆக்கிரமிப்பது குறைகிறது. இருப்பினும், எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ காரில் ஸ்பேர் சக்கரம் வழங்கப்படவில்லை. அதாவது அந்த அளவிற்கு இடவசதி இல்லை. அதற்கு பதிலாக பஞ்சர் ரிப்பேர் கிட் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் ஒரேயொரு 1.2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன. புதிய எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி காரிலும் இதே பெட்ரோல் என்ஜின் தான் கொடுக்கப்படுகிறது என்றாலும், என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்காது.

exter hy-cng duo arrives showrooms

எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ காரின் மைலேஜ் ஒரு கிலோ சிஎன்ஜி-க்கு 27.1கிமீ ஆகும். இந்த மைலேஜை பெற நீங்கள் காரை சிஎன்ஜி மோடில் இயக்க வேண்டும். காஸ்மிக் நீலம், ஸ்டார்ரி நைட், டைட்டன் கிரே, ரேஞ்சர் காக்கி, ஃபியரி ரெட் மற்றும் அட்லாஸ் வெள்ளை என மொத்தம் 6 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ காரை வாங்கலாம்.

பயணிகளின் பாதுகாப்புக்கு இந்த சிஎன்ஜி காரில் 6 ஏர்பேக்குகள், 3-பாயிண்ட் சீட்பெல்ட், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங், குழந்தை இருக்கைக்கான ஹேங்கர் பாயிண்ட்கள் உள்ளிட்டவற்றை பெறலாம். இந்த சிஎன்ஜி காரின் நீளம் 3815மிமீ, அகலம் 1710மிமீ, உயரம் 1631மிமீ, வீல்பேஸ் நீளம் 2450மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரென்ஸ் 185மிமீ ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய ஹூண்டாய் எக்ஸ்டர் ஹை-சிஎன்ஜி டியோ கார் டீலர்ஷிப் ஷோரூம் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளதால், விரைவில் இதன் டெலிவிரிகளை ஹூண்டாய் நிறுவனம் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த காரை புக் செய்தவர்களுக்கு இது நிச்சயமாக மகிழ்ச்சியான செய்தியாகவே இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 29, 2024, 15:45 [IST]
English summary
Hyundai exter hy cng duo arrives dealership showrooms check all details here
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X