ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிசனை வாங்க மக்கள் குவிய போறாங்க! இதோ அந்த காரின் டாப் முக்கிய அம்சங்கள்!
டாடா பஞ்ச் (Tata Punch) மைக்ரோ எஸ்யூவி கார் மாடலுக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தால் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் கார் மாடலே எக்ஸ்டர் (Exter) ஆகும். டாடா பஞ்ச்-க்கு கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்பதே இந்த கார் கொண்டு வரப்பட்டதற்கான முக்கிய நோக்கமாகும். இதை உறுதிப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன் இதில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனும் எக்ஸ்டர் கார் மாடலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டாடா பஞ்ச் இந்த மூன்று அவதாரங்களிலும் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே சிறப்பு பதிப்பின் வாயிலாகவும் பஞ்ச்-க்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நிறுவனம் சமீபத்தில் எக்ஸ்டர் நைட் எடிசன் எனும் பதிப்பை அறிமுகப்படுத்தியது.

இந்த சிறப்பு பதிப்பு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இந்த சிறப்பு பதிப்பு பற்றி அறிய வேண்டிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம். குறிப்பாக, எக்ஸ்டர் நைட் எடிசனின் உயர் சிறப்பம்சங்கள் என்ன என்பது பற்றியே பார்க்க உள்ளோம்.
கருப்பு நிறத்தால் அலங்கரிப்பு: பெயருக்கு ஏற்ப இந்த சிறப்பு பதிப்பை ஹூண்டாய் நிறுவனம் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரித்து இருக்கின்றது. அதேநேரத்தில் ஐந்து ஒற்றை நிற தேர்வு மற்றும் இரண்டு இரட்டை நிற தேர்வால் அலங்கரிக்கப்பட்ட வண்ண தேர்வுகளே இந்த கார் மாடலில் வழங்கப்பட இருக்கின்றது
இந்த அனைத்து நிற தேர்வுகளிலும் முதன்மை நிறமாக கருப்பு நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கிரில், எம்பளம், ஸ்கிட் பிளேட் மற்றும் அலாய் என மிக முக்கியமான மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய பாகங்களில் இந்த நிறமே பயன்படுத்தப்பட இருக்கின்றது. இதுதவிர, சற்றே முரண்பாடான லுக்கை வழங்கும் விதமாக இந்த கார் மாடலில் மாற்று நிறங்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சிவப்பு நிற அலங்கரிப்பு: இந்த சிறப்பு பதிப்பில் கான்ட்ராஸ்ட் நிறம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக மேலே கூறியிருந்தோம். அந்தவகையில் கருப்பு நிறத்திற்கு அடுத்தபடியாக சிவப்பு நிறமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. காரின் முன்பக்க பம்பர் , பக்கவாட்டு பகுதி மற்றும் பின் பக்கங்களில் இந்த நிறத்தினாலான அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
எக்ஸ்டர் நைட் எடிசனின் உட்பக்கம் எப்படி இருக்கின்றது? வெளிப்புறத்தைப் போலவே இந்த சிறப்பு பதிப்பின் உட்பக்கமும் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இது கூடுதல் பிரீமியமான ரைடு அனுபவத்தை அதன் பயனர்களுக்கு வழங்கும். டேஷ்போர்டு, ஏசி துவாரம், இருக்கை, ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கை என பல பகுதிகளில் இந்த அலங்கரிப்பை நம்மால் காண முடிகின்றது.
எஞ்சின் விபரம்: ஹூண்டாய் எக்ஸ்டர் நைட் எடிசன் காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வே வழங்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கு கூடுதல் போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட கார் மாடலே எக்ஸ்டர் ஆகும். இந்த சதியை அந்த காருக்கு தொடர்ச்சியாக செய்யும் பொருட்டே எக்ஸ்டர் நைட் எடிசன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








