டாடாக்கு மேலும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் ஹூண்டாய்! இவங்கள வம்புக்கு இழுக்கலைனா அதுக்கு தூக்கமே வராதுபோல
டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக பஞ்ச் (Punch) மாறி இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவில் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் என பல அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இது ஓர் அதிக பாதுகாப்பு தரம் மிக்க கார் மாடலும்கூட. பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இத்தகைய கார் மாடலுக்கே தொடர்ச்சியாக தன்னுடைய தயாரிப்பின் வாயிலாக இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகின்றது ஹூண்டாய் (Hyundai) நிறுவனம்.
இந்த நிறுவனம் ஏற்கனவே பஞ்ச்-க்கு போட்டியாக எக்ஸ்டர் (Exter) கார் மாடலை தற்போது சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த கார் மாடலின் பக்கம் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஓர் முயற்சியாக அந்நிறுவனம் அதில் ஓர் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் புதிய சிறப்பு பதிப்பின் டீசரை வெளியிட்டு உள்ளது. இது கார் காதலர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. எக்ஸ்டர் நைட் எடிசன் (Exter Knight Edition) எனும் பதிப்பையே ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையை இந்தியாவில் தெரியப்படுத்தும் விதமாகவே தற்போது அதன் டீசர் படம் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த வருகை இந்தியாவில் அமையும் எனில் டாடா பஞ்ச்-க்கு மேலும் நெருக்கடியான சூழல் உருவாகக் கூடும் என கருதப்படுகின்றது. தற்போது எக்ஸ்டர் நைட் எடிசனின் பின் பக்க படமே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த டீசர் படத்தின் வாயிலாக, வழக்கமான எக்ஸ்டரில் இடம் பெற்றிருக்கும் அதே 'எச்' வடிவத்தில் ஒளிரக் கூடிய லைட்டே இதிலும் பயன்படுத்தப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
மேலும், நைட் எடிசன் எனும் பெயருக்கு ஏற்ப அது முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட இருப்பதும் தரெிய வந்திருக்கின்றது. கருப்பு நிறமான காரின் பெரும்பாலான பகுதியை அலங்கரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, கிரில், அலாய் வீல்கள், ரூஃப் மற்றும் லோகோ போன்ற பிறவற்றிலும் கருப்பு நிறத்தை எதிர்பார்க்கலாம்.
காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் கருப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற அலங்கரிப்பு விஷயத்திலேயே இந்த சிறப்பு பதிப்பு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டதாக இருக்கப் போகின்றது. மற்ற விஷயங்களில் எக்ஸ்டர் நைட் எடிசன் பதிப்பு வழக்கமான எக்ஸ்டருடன் ஒத்துப் போகும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, எஞ்சின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்குமாம். தற்போது விற்பனையில் உள்ளன எக்ஸ்டர் கார் மாடலில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டாரே, 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 81 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
எக்ஸ்டரில் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதே ஆப்ஷனே எக்ஸ்டர் நைட் எடிசனிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் அறிமுகத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய விபரங்களும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், எக்ஸ்டர் நைட் எடிசனின் அறிமுக நாள் பற்றிய விபரமும் வெளியிடப்படவில்லை. சீக்கிரமே அதுபற்றிய தகவலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹூண்டாய் எக்ஸ்டர் இந்தியாவில் ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப விலையிலேயே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா பஞ்ச் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை தன் வசம் ஈர்க்கும் பொருட்டே ஹூண்டாய் தற்போது செயல்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே எக்ஸ்டர் கார் மாடலில் பெட்ரோல்-சிஎன்ஜி ஆப்ஷனை அது வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர, இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே சிறப்பு பதிப்பின் வாயிலாகவும் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஹூண்டாய் களமிறங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








