வெறும் 40 கார் தான் ஏற்றுமதியாகிருக்குது! எக்ஸ்டர் காருக்கு இப்படி ஒரு நிலைமைன்னு நினைச்சு கூட பார்க்க முடியல!
ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காருக்கு இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த காரை பலர் புக்கிங் செய்து வாங்கி வருகிறார்கள். இந்த கார் மீது மக்கள் பலர் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், இந்த காரை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதில் ஹூண்டாய் நிறுவனம் மிகப்பெரிய அளவு சுணக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மாதம் குறைவான எண்ணிக்கையிலான கார்கள் மட்டுமே வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கு போட்டியாக ஹுண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காருக்கு மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பு இருப்பதால் இதன் விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த காரை ஏகப்பட்ட நபர்கள் புக்கிங் செய்து டெலிவரிக்காக காத்திருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரை புக்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், இந்த காரை வாங்க பலர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்திய மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த எக்ஸ்டர் கார் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நல்ல டிமாண்ட் இருக்கும் இந்த காரை வாங்க இந்தியாவிலேயே ஏகப்பட்ட மக்கள் போட்டி போட்டு வரும் நிலையில் வெளிநாட்டிற்கும் இந்த கார் ஏற்றுமதியாவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஆனால் இந்த ஏற்றுமதியில் மிகப்பெரிய சிக்கலை ஹூண்டாய் நிறுவனம் சந்தித்து வருகிறது. தற்போது தேவைக்கு ஏற்ப தயாரிப்பு இல்லை என்பதால் இந்த கார்களை கேட்பவர்களுக்கெல்லாம் வழங்குவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த காரை புக் செய்த இந்திய மக்களுக்கே கொடுக்கும் அளவிற்கு தயாரிப்பு இல்லை என்பதால் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய பெரிய அளவில் முடியவில்லை. கடந்த மார்ச் மாதம் இந்நிறுவனம் வெறும் 40 எக்ஸ்டர் கார்களை மட்டுமே வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் ஹுண்டாய் நிறுவனம் இந்த காரின் தயாரிப்பை அதிகப்படுத்தி இந்திய விற்பனையையும் வெளிநாட்டு ஏற்றுமதியையும் அதிகப்படுத்த திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் காரை பொருத்தவரை இதன் சிஎன்ஜி வேரியன்டிற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை காத்திருப்பு காலமும், பெட்ரோல் மேனுவல் வேரியன்டிற்கு மூன்று முதல் நான்கு வாரம் வரை காத்திருப்பு காலமும், இஎக்ஸ் வேரியண்டிற்கு 14 முதல் 16 வாரங்கள் வரை காத்திருப்பு காலமும் வழங்கப்படுகிறது, ஆட்டோமெட்டிக் வேரியன்டிற்கு நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை காத்திருப்பு காலம் வழங்கப்படுகிறது.

இந்த கார் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி இஎக்ஸ், எஸ் எக்ஸ், எஸ்எக்ஸ் ஒ, எஸ்எக்ஸ் ஓ கனெக்ட் ஆகிய வேரியன்ட்களில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த அனைத்து வேரியன்டுகளிலும் 1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த இன்ஜின் 83பிஎச்பி பவரையும் 114என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.
இதே இன்ஜினல் சிஎன்ஜி ஆப்ஷனும் இருக்கிறது. சிஎன்ஜி ஆப்ஷன் உடன் இந்த கார் விற்பனைக்கு வரும்போது 69 பிஎச்பி பவரையும் 95.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் எஸ் மற்றும் எஸ்எக்ஸ் ஆகிய வேரியண்டுகளில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன.
இதில் 1.2 லிட்டர் மேனுவல் காரில் உள்ள ஆப்ஷன்களை பொறுத்தவரை 6 ஏர் பேக்குகள் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், சென்ட்ரல் லாக்கிங், 3 பாயிண்ட் சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், எல்இடி டெய்ல் லைட், பாடி கலர் பம்பர் டிஜிட்டல், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.
உட்புறம் 8 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே ஆப்ஷன், நான்கு ஸ்பீக்கர்கள், ஸ்டேரிங் மவுண்ட் கண்ட்ரோல், ரியர் ஏசி வென்ட், பவர் விண்டோ, எலக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் யுஎஸ்பி சி போர்ட், 14 இன்ச் ஸ்டேரிங் வீல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன . எலக்ட்ரிக்லி ஃபோல்ட் மிரர் ஆப்ஷன் கொண்ட காரில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் இந்த எக்ஸ்டர் காரின் விற்பனையை அதிகப்படுத்த தனது தயாரிப்பு அதிகப்படுத்தினாலே போதும். மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவுக்கு டிமாண்ட் இருப்பதால் தயாரிப்புக்கு இணையாக விற்பனை இருக்கிறது. தயாரிப்பு போக மீதம் இருந்தால் நிச்சயம் ஏற்றுமதிக்கும் இதை பயன்படுத்த முடியும். இதனால் இந்த காரின் தயாரிப்பு திறனை நிறுவனம் அதிகப்படுத்த முயற்சிகளை கையில் எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









