டாடா பஞ்ச் காருடன் மோதி பஞ்சரான எக்ஸ்டர்! 20வது இடத்துக்கு தூக்கி வீசிட்டாங்க!

டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செகண்ட் என்ற காரை அறிமுகப்படுத்தியது, இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் பஞ்ச் கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. ஆனால் ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் இந்தியாவில் விற்பனையாகி வரும் டாப் 20 கார் பட்டியலில் 20வது இடத்தை பிடித்துள்ளது. இந்த காரின் விற்பனை சரிவுக்கு என்ன காரணம் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகி வரும் எஸ்யூவி கார் என்றால் அது டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான். மக்கள் மத்தியில் இந்த கார் பிரபலமாகிவிட்டது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக தான் ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற மைக்ரோ எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

hyundai exter sales down

ஹுண்டாய் நிறுவனம் டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கு போட்டியாக காரை அறிமுகப்படுத்துவதாக செய்தி வந்த போது, இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. டாடா பஞ்ச் கார் போல இந்த காரும் கடுமையான விற்பனையை பெறும், சொல்லப்போனால் பஞ்ச் விற்பனையை குறைக்கும் என்று கூட மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த கார் வந்த புதிதில் ஏகப்பட்ட நபர்கள் இந்த காரை புக் செய்து வாங்கினார்கள்.

ஆனால் இந்த கார் சாலைக்கு வந்து ஓட துவங்கிய பிறகு மக்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை இருந்த வரவேற்கும் குறைந்து கொண்டே தான் போகிறது. இதனால் சமீப காலமாக இந்த காரின் விற்பனை சரிவடைந்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 6908 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 6 மாதத்தில் நடந்த விற்பனையில் கடந்த ஜூன் மாதம் தான் மிக குறைவான கார்கள் விற்பனையாகி உள்ளது.

hyundai exter sales down

இதுவே டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 18,238 கார்கள் விற்பனையாகி உள்ளன. டாடா பஞ்ச் கார் விற்பனையாகும் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு விற்பனை தான் ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் விற்பனையாகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரைப் பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் 17,978கார்களும், பிப்ரவரி மாதம் 18,438 கார்களும், மார்ச் மாதம் 17,547 கார்களும் ஏப்ரல் மாதம் 19,158 கார்களும் மே மாதம் 18,949 கார்களும், ஜூன் மாதம் 18,238 கார்களும் விற்பனையாகி உள்ளன. கடந்த மே மாத விற்பனையை விட ஜூன் மாத விற்பனை என்பது பஞ்ச் காரியிலும் குறைவாக இருந்தாலும், இது மிகப் பெரிய அளவில் குறைவாக இல்லை.

hyundai exter sales down

அதேநேரம் ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் காரை பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் 8,229கார்களும், பிப்ரவரி மாதம் 7,582கார்களும், மார்ச் மாதம் 8,475கார்களும் வேப்பூர் மாதம் 7,756 கார்களும் மே மாதம் 7697கார்களும், ஜூன் மாதம் 6,908 கார்களும் விற்பனையாகி உள்ளன. இதை பார்க்கும்போது கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் 8000த்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 6000-த்திற்கும் அதிகமான கார்கள் தான் விற்பனையாகி வருகிறது.

இதன் மூலம் மக்கள் தொடர்ந்து டாடா பஞ்ச் காரையே அதிகம் விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் விற்பனையான கார்களில் டாப் 10 பட்டியல் எடுத்துப் பார்க்கும்போது டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரர் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான கார்கள் இந்த கார்கள்தான் விற்பனையாகியுள்ளன. இதுவே ஹூண்டான நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா கார் 20-வது இடத்தில் இருக்கிறது.

டாடா பஞ்ச் கார் போட்டி போட்டு முதல் இரண்டு மூன்று இடங்களில் ஹுண்டாய் எக்ஸடர் கார் இடம் பிடிக்கும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தரும் வகையில் எக்ஸ்டர் காரின் விற்பனை கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை சொல்கிறார்கள். முக்கியமாக எக்ஸ்டர் கார் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படாத முக்கியமான காரணமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் தலைமுறையாக கார் வாங்கும் பலர் மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் தான் காரை வாங்க விரும்புகிறார்கள். இதில் பாதுகாப்பு அம்சம் மிக முக்கியமாக பார்க்கிறார்கள் அதனால் டாட்டா பஞ்ச் காரர் அதிகமாக விற்பனை ஆகிறது இதுபோக சிஎம்சி வேரியண்டிலும் இரண்டு சிலிண்டர் கொண்ட சிஏஜி வெரி அண்ட் பன்ச் கார் ஏற்கனவே அறிமுகம் வாங்கிவிட்டது சமீபத்தில் தான் எக்ஸ்டர் காரில் இரண்டு சிஎன்சி சிலிண்டர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2024, 7:00 [IST]
English summary
Hyundai exter sales down tata punch rival top 20 best selling june 2024
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X