இவ்ளோ கம்மியான விலையில் ஹூண்டாய் காரா! வண்டி கட்டிகிட்டு எல்லாரும் ஷோரூம்க்கு போயிட்டு இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர். இதன் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7,756 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த விற்பனை எண்ணிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அந்த சமயத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையிலேயே இல்லை. அதாவது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், குறைவான விலை என்பது மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.

Hyundai Exter

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Hyundai Exter Bonnet

இதில், மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், ஏஎம்டி கியர் பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹூண்டாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 69 ஹெச்பி மற்றும் 95 என்எம் ஆக மட்டுமே இருக்கும். பவர் அவுட்புட் சற்று குறைந்தாலும் கூட, சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.

அதாவது ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓரளவிற்கு குறைவான விலை, சிறப்பான மைலேஜ் ஆகியவற்றுடன், அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டிருப்பதும், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

8 இன்ச் டச்ஸ்க்ரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம், சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் போன்றவை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் மிக முக்கியமான வசதிகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்கிறது என்பது எங்கள் கருத்து. வரும் காலங்களில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். அதற்கு பிறகு விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, May 18, 2024, 23:53 [IST]
English summary
Hyundai exter sales report april 2024 full details inside
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+