பைக் மாதிரி மைலேஜ் தரும் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல தேன் மிட்டாய் வாங்கற மாதிரி எல்லாரும் வாங்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் எக்ஸ்டர் போட்டியிட்டு வருகிறது.

இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதத்திற்கான ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 8,229 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட முடியாது.

Hyundai Exter

ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் மிக குறுகிய காலத்திலேயே ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையில் சாதனை படைக்க தொடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

கடந்த ஜனவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் பட்டியலில், எக்ஸ்டர் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. முதல் 2 இடங்களில் க்ரெட்டா மற்றும் வெனியூ ஆகிய கார்கள் உள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் கார் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாறியுள்ளதற்கு பின்னால் 2 முக்கியமான காரணங்கள் உள்ளன.

Hyundai Exter AC

அவை குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் (Mileage) ஆகியவை ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 19.4 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 19.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 27.1 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. அத்துடன் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வரும் காலங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஐசி இன்ஜின் மாடலை போல், எலெக்ட்ரிக் வெர்ஷனின் விலையும் மிகவும் குறைவாகதான் இருக்கும் என கருதப்படுகிறது. எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 17, 2024, 23:49 [IST]
English summary
Hyundai exter sales report january 2024 price mileage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+