பைக் மாதிரி மைலேஜ் தரும் காரின் விலையை கேட்டு ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்! இவ்ளோ கம்மியா! நம்பவே முடியல!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் ஒட்டுமொத்தமாக 7,697 எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

இதன் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி ரக கார்களின் பட்டியலில், ஹூண்டாய் எக்ஸ்டர் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இந்த காரின் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட முடியாது.

Hyundai Exter

ஏனெனில் அந்த சமயத்தில் ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனையிலேயே இல்லை. அதாவது கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே 2023ம் ஆண்டு மே மாதத்துடன், நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

இருப்பினும் ஒரு மாதத்தில் 7,697 கார்கள் என்பது சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான். இதற்கு ஹூண்டாய் எக்ஸ்டர் கார் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதுதான் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை தற்போதைய நிலையில் வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Hyundai Exter Seat

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இதற்கு அடுத்தபடியாக இந்த கார் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு இரண்டாவது காரணம் மைலேஜ் (Mileage) ஆகும்.

ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இதற்கு அடுத்தபடியாக விலை குறைவான ஒரு காராக இருந்தாலும் கூட, ஹூண்டாய் எக்ஸ்டரில் ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கு கிடைத்துள்ள வெற்றிக்கு இது 3வது காரணம் ஆகும். இதில், சிங்கிள் பேன் சன்ரூஃப், ட்யூயல் கேமராக்களுடன் டேஷ்கேம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இதுதவிர 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவையும், ஹூண்டாய் எக்ஸ்டர் மைக்ரோ எஸ்யூவி காரின் முக்கியமான வசதிகளாக இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்கிறது. வரும் ஆண்டுகளில், ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். அதற்கு பிறகு ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 17:44 [IST]
English summary
Hyundai exter sales report may 2024 price mileage
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+