மைலேஜ்ல இந்த காருக்கு முன்னாடி டூவீலர் கூட ஓரமாதான் நிக்கணும்! விலை எவ்ளோனு தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் வேகமாக பிரபலமான கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் கடந்த மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த மார்ச் மாதம் 8,475 எக்ஸ்டர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த மார்ச் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் பட்டியலில், எக்ஸ்டர் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) காரும், 2வது இடத்தில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) காரும் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கையை, கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம்தான், எக்ஸ்டர் கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது.

Hyundai Exter

ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் 4.2 இன்ச் எம்ஐடி உடன் கூடிய முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளும், ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் அஸிஸ்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

Tata Punch EV

அத்துடன் இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா ஆகிய அம்சங்களும் ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் இடம்பெற்றுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய கார்களிலும் இதே இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதிகபட்சமாக 83 ஹெச்பி பவர் மற்றும் 114 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் (Gear Box) ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் காரில், சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் இடம்பெற்றுள்ளது. சிஎன்ஜி வேரியண்ட்களிலும், இதே 1.2 லிட்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்கும்போது, இதன் பவர் அவுட்புட் 69 ஹெச்பி மற்றும் 95.2 என்எம் ஆக குறைந்து விடும்.

எனினும் சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும். எக்ஸ்டர் காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் ஹூண்டாய் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 27.10 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.28 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிநவீன வசதிகள், செயல்திறன் மிக்க இன்ஜின் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகியவற்றுடன், விலையும் ஓரளவிற்கு குறைவாக இருப்பதால்தான், ஹூண்டாய் எக்ஸ்டர் கார் மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது என நாங்கள் கருதுகிறோம். ஆனால் ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் நேரடி போட்டி மாடலான டாடா பன்ச் (Tata Punch)இதைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி கொண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 17,547 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஹூண்டாய் எக்ஸ்டர் உடன் ஒப்பிடும்போது, இது மிகப்பெரிய எண்ணிக்கை! டாடா பன்ச் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனை செய்யப்படுவது, அதன் மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. வரும் காலங்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் காரிலும் எலெக்ட்ரிக் வெர்ஷன் களமிறக்கப்படலாம். அப்போது ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விற்பனை எண்ணிக்கையும் கிடுகிடுவென உயரும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 7, 2024, 14:41 [IST]
English summary
Hyundai exter tata punch sales report march 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+