இவ்ளோ கம்மி விலையா! மக்கள் போட்டி போட்டு வாங்கி கொண்டிருக்கும் ஹூண்டாய் கார் இதுதான்..
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார் மாடல்களில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter)-ம் ஒன்றாகும். டாடா மோட்டார்ஸ் (Tata Motors)இன் மிக சிறந்த தயாரிப்புகளில் ஒன்றான பஞ்ச் (Punch) கார் மாடலுக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்டதே இந்த கார் மாடல் ஆகும். இந்த இரண்டும் மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவின் மிக சிறந்த கார் மாடல்கள் ஆகும். இந்த நிலையிலேயே எக்ஸ்டர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, விற்பனைக்குக் கொண்டு வந்ததில் இருந்து இப்போது வரை சுமார் 93 ஆயிரம் யூனிட்டுகள் வரை எக்ஸ்டர் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

சராசரியாக இந்த கார் அறிமுகமாகி ஓராண்டே ஆகின்ற நிலையில் அதற்குள்ளாகவே 93 ஆயிரம் யூனிட்டுகள் எக்ஸ்டர் விற்பனையாகி இருக்கின்றது. இது மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை ஆகும். இந்த விற்பனை எண்ணிக்கை வாயிலாக எக்ஸ்டர் மிகக் கடுமையான சவாலை பஞ்ச் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பதும் தெரிய வந்திருக்கின்றது.
இந்த போட்டியை மேலும் கடுமையானதாக மாற்றும் பொருட்டே ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் மாடலில் நைட் எடிசன் எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இந்த கார் 6 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் என்கிற மிகக் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேலும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இந்த இரண்டு ஆப்ஷன்களும் எக்ஸ்டர் காரில் வழங்கப்படுகின்றன. அதேவேளையில், பஞ்ச் காரோ பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பிரீமியம் அம்சங்களை மிக மிக தாராளமாக எக்ஸ்டரில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.
இதுமாதிரியான காரணங்களினாலேயே இந்த காருக்கு வரவேற்பு பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, எக்ஸ்டர் காரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், குரல் கட்டளை வாயிலாக கன்ட்ரோல் செய்யும் வசதிக் கொண்ட சன்ரூஃப், டூயல் டேஷ் கேமிரா, ஆன்-போர்டு நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுதவிர, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் (இஎஸ்சி), இரண்டு டேஷ் கேமிராக்கள் மற்றும் ரியர் வியூ கேமிரா போன்ற அட்வான்ஸ்டு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதே எஞ்சினே சிஎன்ஜி தேர்விலும் பயன்படுத்தப்படுகின்றது. இது பெட்ரோலில் இயங்கும்போது லிட்டர் ஒன்றிற்கு 19.2 கிமீ முதல் 19.4 கிமீ வரையில் மைலேஜை வழங்கும்.
அதேவேளையில், சிஎன்ஜியில் இயங்கும்போது கிலோ ஒன்றிற்கே 27.1 கிமீ வரையில் மைலேஜ் தரும். இத்தகைய அதிக மைலேஜை வழங்கும் கார் மாடலே எக்ஸ்டர் ஆகும். இந்த காரணத்திற்காகவும் எக்ஸ்டருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வரும் நாட்களிலும் இந்த கார் மாடலுக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ஹூண்டாய் நிறுவனம் தற்போது எக்ஸ்டர் கார் மாடலில் மின்சார வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









