ஆம்பூர் பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் போலையே.. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் 4 லட்சம் யூனிட் விற்பனையாகிருச்சா!.

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 Nios) இருக்கின்றது. இந்த காரை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான அவதாரங்களில் வாங்கிக் கொள்ள முடியும். இதன் விலையும் சற்றே குறைவுதான். ரூ. 5.92 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தே விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் அதிகபட்ச விலையே ரூ. 8.56 லட்சம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய ஓர் கார் மாடலே விற்பனையில் தற்போது சாதனைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் 4 லட்சம் யூனிட் வரை விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த விற்பனை எண்ணிக்கையானது வெறும் ஐந்தாண்டுகளில் பெறப்பட்டவை ஆகும்.

Grand i10 nios surpasses 4 lakh sales

இந்த காரை முதன் முதலில் ஹூண்டாய் நிறுவனம் 2019 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் கிராண்ட் ஐ10 நியாஸ் விற்கப்படுகின்றது. எரா (Era), மேக்னா (Magna), கார்பரேட் (Corporate), ஸ்போர்ட்ஸ் (Sportz) மற்றும் ஆஸ்தா (Asta) ஆகியவையே அவை ஆகும்.

இதில் சிஎன்ஜி ஆப்ஷன் மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றிலேயே வழங்கப்படுகின்றது. மேலும், மிக சமீபத்திலேயே இந்த காரின் சிஎன்ஜி ஆப்ஷனில் டூயல் சிலிண்டர் வசதியை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அது, கிராண்ட் ஐ10 நியாஸ் எச்ஒய்-சிஎன்ஜி ட்யூவோ (Grand i10 Nios Hy-CNG Duo) என்கிற பெயரிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 7 லட்சத்து 75 ஆயிரத்து 300 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஹூண்டாய் நிறுவனம் முன்பு இந்த கார் மாடலில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டும் மிகப் பெரிய அளவில் வழங்கி வந்தது.

இதனால், பூட் ஸ்பேஸ் என்பது மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. இந்த நிலையிலேயே இந்த பெரிய சிலிண்டரை இரண்டாக பிரித்து வழங்கி இருக்கின்றது. அதாவது, இரண்டு சிறிய சிலிண்டர்களாக வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால், பூட் ஸ்பேஸ் அளவு பலமடங்கு அதிகரித்திருக்கின்றது. இந்தியாவில் டூயல் சிலிண்டர் வசதியை முதன் முதலில் டாடா மோட்டார்ஸே அதன் சிஎன்ஜி கார் மாடல்களில் அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த நிலையிலேயே இந்த தொழில்நுட்பத்தை ஹுண்டாய் நிறுவனமும் கையில் எடுத்திருக்கின்றது. இதுபோன்று காலத்திற்கு ஏற்ப சில தனித்துவமான யுக்திகளைக் கையாள்வதன் விளைவாகவே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே தற்போது 4 லட்சம் யூனிட் விற்பனை என்கிற சாதனையை கிராண்ட் ஐ10 நியாஸ் இந்தியாவில் படைத்திருக்கின்றது.

இது அதிகம் பிரீமியம் அம்சங்களை தாங்கிய கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 20.25 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், எல்இடி டெயில் லைட், ரூஃப் ரெயில், சுறா துடுப்பின் அமைப்புடைய ஆன்டெனா ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, கால் வைக்கு பகுதியில் லைட், பின் பக்கத்திற்கான ஏசி துளை, டில்ட் செய்யும் வசதிக் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், பின் பக்கத்திற்கான பார்க்கிங் கேமிரா, பகல் மற்றும் இரவு நேரங்களுக்கான ஐஆர்விஎம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்களை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் அதனுள் தாங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்வதில் ஹூண்டாய் நிறுவனம் ஓர் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. இதுபோன்று, மார்க்கெட்டின் தேவையை அது மிக சிறப்பாக பூர்த்தி செய்வதனாலேயே நல்ல விற்பனை வளர்ச்சியை ஹூண்டாய் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 4, 2024, 5:00 [IST]
English summary
Hyundai grand i10 nios hits 4 lakh sales milestone in india
மேலும்... #hyundai #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+