யாரும் எதிர்பாராத மைலேஜ் தரும் கிரெட்டாவை தயார் செய்யும் ஹூண்டாய்! என்ன பண்ண போறாங்க தெரியுமா?
ஹூண்டாய் நிறுவனம் தனது மிட் சைஸ் எஸ்யூவி மற்றும் செடான் கார்களுக்கு ஹைபிரிட் என்ஜினை உருவாக்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஹுண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான திட்டத்தை போட்டுள்ள நிலையில், தற்போது ஹைபிரிட் கார்களுக்கான திட்டத்தையும் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்திய மக்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் வாகனங்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கையை கொண்டுள்ளனர். மாருதிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இந்நிறுவனம் தான் இருக்கிறது.

இந்நிலையில் ஹுண்டாய் மோட்டார் குருப் நிறுவனம் தற்போது தனது முதல் ஹைபிரிட் காரை இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது ஹைபிரிட் வாகனங்களையும் திட்டமிட்டுள்ளது நமக்கு தெரியவந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஹைபிரிட் இன்ஜின் ஆப்ஷனை தனது மிட் சைஸ் எஸ்யூவி மற்றும் செடான் கார்களுக்கு பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த ஹைபிரிட் சிஸ்டத்தை ஹுண்டாய் பிராண்டில் விற்பனையாகும் கார்களுக்கும், அதேநேரம் கியா பிராண்டில் விற்பனையாகும் கார்களுக்கும் பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது.

இதனால் ஹூண்டாய் கிரெட்டா காரில் இந்த ஹைபிரிட் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026 அல்லது 2027ம் ஆண்டு இது விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே ஹுண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான தனி தயாரிப்பு லைனை உருவாக்குவது குறித்த முடிவை எடுத்துள்ள நிலையில் முதலில் எலெக்ட்ரிக் கார் தான் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக கிரெட்டா எலெக்ட்ரிக் கார் தான் இந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல்வேறு விதமான மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனைக்கு அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிப்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் தற்போது எக்ஸைடு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு பொருத்துவதற்கான பேட்டரிகளை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வாகனங்களில் எக்ஸைடு பேட்டரிகள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை மட்டுமே தயாரித்து வந்த ஹுண்டாய் நிறுவனம் இனி இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களையும் ஹைபிரிட் கார்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஹைபிரிட் கார்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் அதிக மைலேஜ் கொண்ட கார்களாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மாருதி நிறுவனம் டொயோட்டா நிறுவனத்துடன் சேர்ந்து ஹைபிரிட் கார்களை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் மாருதி நிறுவனம் தனியாக ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட ஹைபிரிட் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருகிறது. இது அறிமுகமானால் டொயோட்டா நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் மாருதி நிறுவனமே தான் சொந்தமாக தயாரித்த ஹைபிரிட் காரர்களை பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் ஹைபிரிட் கார்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் பட்சத்தில் டொயோட்டா, மாருதி ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக ஹைபிரிட் காரர்களை களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் எந்த அளவிற்கு அதிகமாக விற்பனையாகுமோ அதே அளவிற்கு ஹைபிரிட் கார்களின் விற்பனையும் அதிகரிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









