இந்த மாசமே இந்த காரை வாங்குனா ரொம்ப நாள் வெயிட் பண்ண வேணாம்! ஏன் தெரியுமா?

நீங்கள் இந்த மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 காரை வாங்குவதாக முடிவு செய்து இருந்தால், தற்போது இந்த காருக்கான காத்திருப்பு காலம் என்பது அதிகாரப்பூர்வமாக குறைக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் புக் செய்தவர்கள் காத்திருந்த காலத்தை விட நீங்கள் தற்போது புக் செய்தால் குறைவான நாட்களே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஐ20 கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறதே ஹேட்ச்பேக் கார்களில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் காராக இந்த கார் இருப்பதால் மார்க்கெட்டில் இந்த காருக்கு நல்ல மவுசு இருக்கிறது. இதனால் இந்த காரின் தயாரிப்புக்கு இணையாக விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த காரை தற்போது நீங்கள் ஷோரூமுக்கு சென்று உடனே புக் செய்து வாங்க முடியாது. இதற்கான காத்திருப்பு காலம் என்பது இருக்கிறது.

hyundai i20 waiting period

ஹுண்டாய் ஐ20 காருக்கான இந்த மார்ச் மாத காத்திருப்பு காலம் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த காரை வாங்க தற்போது 10 வாரங்கள் அதாவது 70நாட்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 70நாட்கள் காத்திருப்பு காலம் என்பது சிவிடி வேரியண்ட் காருக்கான காத்திருப்பு காலம் தான் மற்ற அனைத்து வேரியண்ட் கார்களும் 6 வாரங்கள் அதாவது 42நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல இந்த காத்திருப்பு காலம் என்பது நீங்கள் வாங்கும் காரின் வேரியண்ட், கலர், கியர் ஆப்ஷன், எந்த ஊரிலிருந்து இந்த காரை வாங்குகிறீர்கள், எந்த டீலர்ஷிப் மூலமாக இந்த காரை வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் விரும்பிய கார் தற்போது ரெடியாக இருந்தால் உடனடியாக கூட இந்த காரை வாங்கி செல்ல வாய்ப்புள்ளது.

hyundai i20 waiting period

ஹுண்டாய் நிறுவனம் கடந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் என்ட்ரி லெவெலில் கார் வாங்கும் பலர் இந்த காரை விரும்பி தேர்வு செய்து வருகிறார்கள்.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இது ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இது இதில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 83 பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

hyundai i20 waiting period

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோலின் ஆப்ஷன் இருந்தது. இந்த இன்ஜின் ஆப்ஷனை அந்நிறுவனம் தற்போது நிறுத்திவிட்டது. தற்போது உள்ள 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனில் ஐடியல் ஸ்டாப் அண்ட் கோ ஆப்ஷன் இருக்கிறது. அதாவது சிக்னலில் நீங்கள் காரை நிறுத்தி இருந்தால் இன்ஜின் தானாக நின்றுவிடும். பின்னர் நீங்கள் ஆக்சிலேட்டரை லேசாக அழுத்தினால் போதும் இன்ஜின் ஸ்டார்ட்டாகி தனது பயணத்தை துவங்கிவிடும்.

இந்த காரில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இந்த காரின் உட்பகுதியில் ஆம்பியன்ஸ் லைட்டிங் இருக்கிறது. இதுபோக 10.25 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ 7 ஸ்பீக்கர் உடன் கூடிய போஸ் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இந்த காரின் கலரை பொறுத்தவரை 6 சிங்கிள் கலர் மற்றும் இரண்டு டூயல் டோன் கலர்களில் விற்பனைக்கு வருகிறது. முக்கியமாக மக்கள் அதிகம் விரும்பும் அமேசான் கிரே கலரும் இந்த காரில் உள்ள கலர் ஆப்ஷன்களில் ஒன்றாக இருக்கிறது. அடுத்ததாக இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பற்றி பார்ப்போம்.

இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 26 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதில் 6 ஏர் பேக்குகள் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல். அசிஸ்ட் கண்ட்ரோல். வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட், சீட் பெல்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 60 அம்சங்கள் நிறைந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் உட்பகுத்தப்பட்டுள்ளது.

கனெக்டெட் கார் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை 127 கமெண்டுகளை செயல்படுத்தும் வகையில் இது புரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. இதில் 52 கமெண்ட்களை ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் கமெண்ட் செய்ய முடியும். இந்த கனெக்டெட் கார் தொழில்நுட்பம் எந்தவித ஒயர் டெக்னாலஜியும் இல்லாமல் இன்டர்நெட் மூலம் அப்டேட் செய்யக்கூடிய தொழில்நுட்பத்தை கொண்டதாக இருக்கிறது. இதில் 10 உள்ளூர் மொழிகள் மற்றும் இரண்டு சர்வதேச மொழிகளை சப்போர்ட் செய்யும் அமைப்பும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த ஐ20 கார் என்பது ஒரு சிறிய குடும்பத்திற்கு ஏற்ற காராகவும் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும். குடும்பங்களுக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும். இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். நிச்சயம் இந்த மாதம் இந்த காரின் விற்பனை என்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 10:57 [IST]
English summary
Hyundai i20 waiting period march 2024 update
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X