மிடில்-கிளாஸ் மக்கள் ஷோரூமில் குவிய போறாங்க - புது எலக்ட்ரிக் காரில் டாடாவுக்கு சவால்விடும் ஹூண்டாய்!!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் கடந்த ஜூன் மாத இறுதியில் அதன் விலை குறைவான மற்றும் அளவில் சிறியதான எலக்ட்ரிக் காரை இன்ஸ்டர் (Inster) என்கிற 2024 பூஸன் சர்வதேச மொபைலிட்டி கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இந்த புதிய ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் விரைவில் உலகின் பல நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. நமது இந்தியாவும் உள்பட. இந்தியாவில் இந்த ஹூண்டாய் இ-காருக்கு விற்பனையில் போட்டி அளிக்கும் விதமாக ஏற்கனவே டாடா பஞ்ச் இவி மற்றும் சிட்ரோன் இ-சி3 எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த 3 எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அளவுகள்: இந்த 3 எலக்ட்ரிக் கார்களுள் சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் கார் நீளமானது ஆகும். இதன் நீளம் 3,981மிமீ. அதுவே உயரம் என வரும்போது, டாடா பஞ்ச் இவி ஆனது 1,742மிமீ-இல் இந்த 3 கார்களில் உயரமானதாக உள்ளது. புதிய ஹூண்டாய் இன்ஸ்டர் எலக்ட்ரிக் காரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே தூரம் (2,580மிமீ) அதிகமாக உள்ளது.

hyundai inster vs rivals

இந்தியாவில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் இன்ஸ்டர் ஆகும். இன்ஸ்டரில் 17 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே, டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரில் 16-இன்ச்சிலும், சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் காரில் 15-இன்ச்சிலும் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன.

பவர்டிரெயின், ரேஞ்ச் & பெர்ஃபார்மன்ஸ்: அளவில் சிறியதான எலக்ட்ரிக் கார்களான இவை மூன்றிலும் சிங்கிள் மோட்டார் செட்-அப் கொடுக்கப்படுகிறது. புதிய இன்ஸ்டர் எலக்ட்ரிக் காரின் ஷார்ட்-ரேஞ்ச் வெர்சனில் 97 எச்பி வரையிலும், லாங்-ரேஞ்ச் வெர்சனில் 115 எச்பி வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. 42kWh, 49kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் ஹூண்டாய் இன்ஸ்டர் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாடா பஞ்ச் இவி காரை பொறுத்தவரையில், இதன் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்களில் 82 எச்பி வரையிலும், லாங்-ரேஞ்ச் வேரியண்ட்களில் 122 எச்பி வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இந்த டாடா எலக்ட்ரிக் காரிலும் 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் காரில் 57 எச்பி வரையிலான இயக்க ஆற்றல் மட்டுமே கிடைக்கிறது. இந்த சிட்ரோன் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் 29.2kWh என ஒரேயொரு பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

hyundai inster vs rivals

சார்ஜிங் நேரம்: இன்ஸ்டர் காரை 120 கிலோவாட்ஸ் டிசி ஃபாஸ்ட் சார்ஜரின் மூலமாக வெறும் 30 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிடலாம் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதுவே, சாதாரண ஏசி சார்ஜர் இதற்கு கிட்டத்தட்ட 4.5 மணிநேரங்களை எடுத்துக் கொள்ளுமாம். இருப்பினும், மற்ற இரு எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில், புதிய ஹூண்டாய் இன்ஸ்டரின் சார்ஜிங் நேரம் எவ்வளவோ பரவாயில்லை.

ஏனெனில், ரெகுலர் சார்ஜரில் டாடா பஞ்ச் இவி காரை சார்ஜ் செய்வதற்கு 9 மணிநேரங்கள் 40 நிமிடம் தேவைப்படுகிறது. சிட்ரோன் இசி3 காரில் இன்னும் அதிகமாக, 10%- 100% சார்ஜ் ஏற்ற சுமார் 10 மணிநேரங்கள் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி, புதிய இன்ஸ்டர் காரில் இருந்து பெரிய அளவிலான எலக்ட்ரானிக் சாதனங்களையும் தேவைப்பட்டால் சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும்.

விலை: புதிய இன்ஸ்டர் எலக்ட்ரிக் காரின் விலையை இன்னும் ஹூண்டாய் நிறுவனம் அறிவிக்கவில்லை. டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையிலும், சிட்ரோன் இசி3 காரின் விலை ரூ.11.61 லட்சத்தில் இருந்து ரூ.13.41 லட்சம் வரையிலும் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, ஹூண்டாய் கார்கள் சற்று விலைமிக்கவையாக இருக்கும். ஏனெனில், அதற்கேற்ப ஹூண்டாய் கார்களில் மாடர்ன் அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப வசதிகள் அதிகளவில் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதிய இன்ஸ்டர் எலக்ட்ரிக் காரும் தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்ததாக உருவாக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இதன் விலையை நிச்சயமாக ரூ.11 லட்சத்திற்கு அதிகமாகவே எதிர்பார்க்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 13:00 [IST]
English summary
Hyundai inster electric car vs tata punch ev vs citroen ec3 comparison
மேலும்... #electric vehicles #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+