குப்பனையும், சுப்பனையும் எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க போகும் முன்னணி நிறுவனம்! அடி மாட்டு விலையில தர போறாங்களா

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) அதிகம் பேர் வாங்க தொடங்கியுள்ளனர். ஆனால் இன்னும் நிறைய பேர் வாங்க வேண்டுமென்றால், குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வர வேண்டும். இதை மனதில் வைத்து, பல்வேறு முன்னணி நிறுவனங்களும், விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இதில், ஹூண்டாய் (Hyundai) நிறுவனமும் ஒன்றாகும். ஹூண்டாய் இன்ஸ்டர் இவி (Hyundai Inster EV) என்ற பெயரில் விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Hyundai Inster EV

ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதில், 42 kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாக இருக்கலாம். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.

இதுதவிர 49 kWh பேட்டரி ஆப்ஷனையும் ஹூண்டாய் எக்ஸ்டர் இவி கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் டிரைவிங் ரேஞ்ச் 355 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே ஹூண்டாய் எக்ஸ்டர் இவி விலை குறைவானதாக இருந்தாலும் கூட, நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவே இருக்கும்.

Hyundai Inster EV Side Design

டிசி ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை பயன்படுத்தினால், ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, வெறும் 30 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும்.

இதன் நீளம் 3,825 மிமீ ஆகவும், அகலம் 1,610 மிமீ ஆகவும், உயரம் 1,575 மிமீ ஆகவும், வீல் பேஸ் நீளம் 2,580 மிமீ ஆகவும் இருக்கலாம். அதே நேரத்தில் மிகவும் விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகள் (Features) வாரி வழங்கப்படவுள்ளன.

இதன்படி 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளை எல்லாம் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளாக மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அறிவிக்கப்படும்.

வரும் 2026ம் ஆண்டின் மத்தியில் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக 2026ம் ஆண்டு ஜூன் மாதம் ஹூண்டாய் இன்ஸ்டர் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 1, 2024, 9:16 [IST]
English summary
Hyundai inster ev expected price battery options driving range features
மேலும்... #hyundai #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+