ஹூண்டாய் இந்தியர்களுக்காக அதோட குட்டி எலெக்ட்ரிக் காரை களமிறக்க போகுதா! டாடா பஞ்ச் நல்லா இருப்பது புடிக்கலபோல!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாருமே எதிர்பார்த்திராத ஓர் குட்டியான எலெக்ட்ரிக் கார் (Compact Electric Car) மாடலை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இன்ஸ்டர் (Inster) எனும் குட்டியான எலெக்ட்ரிக் காரையே இந்த உலகிற்கு அது அறிமுகப்படுத்தியது. விரைவில் உலக சந்தையில் அதை விற்பனைக்கும் கொண்டு வர உள்ளது. இதை முன்னிட்டே உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியான பூசன் ஆட்டோ ஷோ (2024 Busan International Mobility Show)வின் வாயிலாக அந்த கார் வெளியீடு செய்யப்பட்டது.

தெற்கு கொரியாவிலேயே இந்த வாகன கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கேஸ்பர் (Casper) எனும் கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் எக்ஸ்டர் (Exter) எனும் பெயரில் கேஸ்பர் கார் மாடல் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Hyundai inster ev

கேஸ்பர் கார் மாடலைப் போலவே தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் இன்ஸ்டர் எலெக்ட்ரிக் காரும், இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாகவே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 ஆம் ஆண்டிற்குள் அந்த கார் விற்பனைக்கு வந்துவிடும் என்று கூறப்படுகின்றது. ஆனால், இன்ஸ்டர் எனும் பெயரில் இல்லாமல், எக்ஸ்டர் இவி எனும் பெயரிலேயே அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும் எனில் டாடா மோட்டார்ஸின் குட்டியான எலெக்ட்ரிக் கார் மாடலான பஞ்ச் இவி (Tata Punch EV)க்கு அது நேரடி போட்டியாளராக மாறும். ஆண்டு ஒன்றிற்கு இன்ஸ்டர் இவி-யை சுமார் 65 ஆயிரம் யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

சென்னை உற்பத்தி ஆலையில் வைத்தே இந்த காரும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விரைவில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடலுடன் சேர்த்தே இன்ஸ்டர் இவி உற்பத்தியையும் ஹூண்டாய் மேற்கொள்ள இருக்கின்றது.

இந்தியாவில் கிரெட்டா இவி ஜனவரி 2025இல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதன் வருகை நாள் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையிலேயே கிரெட்டாவைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்குள் இன்ஸ்டர் இவி விற்பனைக்கு வரும் என புதிதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஸ்டர் இவி-யில் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. 42 kWh மற்றும் 49 kWh ஆகியவையே அவை ஆகும். இந்த கார் ஓர் முழு சார்ஜில் 300 கிமீ முதல் 355 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என கூறப்படுகின்றது.

இந்த பேட்டரி பேக்கை அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அந்தவகையில், டிசி உயர்-பவர் சார்ஜிங் ஸ்டேஷனைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும்பட்சத்தில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதுமானதாக உள்ளது.

அதேநேரத்தில், இதே வாகனத்தை 11 kW ஆன்-போர்டு சார்ஜரைப் பயன்படுத்தியும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதேபோல் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாரளமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்தவகையில், அட்வான்ஸ்டு ஓட்டுநர் உதவி அம்சம் (ADAS)கூட இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது.

இந்த அம்சத்தின் வாயிலாக காரை சுற்றி கண்கானிக்கும் வசதி, பார்க்கிங்கின்போது ஏற்படும் மோதலை தவிர்க்கும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், முன்னோக்கி நகரும்போது ஏற்படும் மோதல் தவிர்க்கும் வசதி, லேன் கீப் அசிஸ்ட், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களை இந்த குட்டி எலெக்ட்ரிக் காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா பஞ்ச் இவி காருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை பாதிக்கும் நோக்கிலேயே ஹூண்டாய் இன்ஸ்டர் இவியை களமிறக்கும் பணியில் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இது சற்று மலிவான விலையில் நாட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 11:00 [IST]
English summary
Hyundai inster ev launching in india by 2026 what to expect
மேலும்... #hyundai #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+