இந்த காரை வாங்குறவங்களே கொஞ்சம்தான் இதுல இந்த பிரச்னை வேறையா.. 1,744யூனிட் கார்களை திரும்பி அழைக்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவை, கோனா இவி (Kona EV) மற்றும் ஐயோனிக் 5 (Ioniq 5) ஆகும். இந்த இரண்டுமே சற்று காஸ்ட்லியானவை ஆகும். குறிப்பாக, இந்த இரண்டில் மிக மிக விலை உயர்ந்த கார் மாடலாக ஐயோனிக் 5 காட்சியளிக்கின்றது. அதிக விலையைக் கொண்டிருப்பதால் இந்த கார் பணக்காரர்களுக்கான வாகனமாக மட்டுமே இருந்துக் கொண்டிருக்கின்றது. எனவே விற்பனையும் கொஞ்சமாகதான் இருக்கின்றது.

அதேவேளையில், நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக விற்பனைக்கு ஒன்றரை ஆண்டுகளே ஆகின்ற நிலையில், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் 2 ஆயிரம் வரையிலான வாடிக்கையாளர்களை இந்தியாவில் பெற்றிருக்கின்றது.

Hyundai ioniq 5 recall

இந்த மாதிரியான சூழலிலேயே இந்த ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் சிக்கல் உற்பத்தி கோளாறு ஏற்பட்டு இருப்பதாகக் கூறி அதற்கு மறு அழைப்பு (ரீ-கால்) விடுத்திருக்கின்றது ஹூண்டாய் நிறுவனம். விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை தயாரிக்கப்பட்ட அனைத்து ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் யூனிட்டிலும் குறிப்பிட்ட அந்த உற்பத்தி பிரச்னை ஏற்பட்டு இருப்பதை நிறுவனம் கண்டுபிடித்திருக்கின்றது.

அதன் அடிப்படையிலேயே அக்காருக்கு ரீ-கால் விடுக்கப்பட்டு இருக்கின்றது. ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டுப்பாட்டு அலகு (integrated charging control unit)லேயே பிரச்னை இருப்பதை ஹூண்டாய் கண்டறிந்து உள்ளது. இதை இலவசமாகவே ஹூண்டாய் இந்த மறு அழைப்பின் பேரில் சரி செய்துக் கொடுக்க இருக்கின்றது.

ஒருங்கிணைந்த சார்ஜிங் கட்டுப்பாட்டு அலகு என்பது மிகவும் முக்கியமான ஓர் கருவியாகும். அது, உயர் அழுத்த மின்சாரத்தை காருக்கு ஏற்றவாறு குறைத்து பேட்டரியில் சேகரிக்கின்ற, மிக முக்கியமான பணியையே செய்கின்றது. பிரதான பேட்டரி பேக்கில் இருந்து இரண்டாம் நிலை பேட்டரியை சார்ஜ் செய்யும் இந்த பணியை அது செய்கின்றது.

இதுதவிர, தேவைக்காக வாகனத்தில் இருந்து மின்சாரத்தை வீட்டு உபயோக பொருளுக்காக எடுக்கும்போதும் அது ஓர் கன்ட்ரோலாக செயல்படும். இதுபோன்று இன்னும் பல முக்கிய பணிகளை இந்த கன்ட்ரோல்லர் மேற்கொள்கிறது. இதில் பிரச்னை ஏற்படும் எனில் ஸ்பீக்கர்கள், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் உள்ளிட்டவை செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.

எனவேதான் இந்த விஷயத்தில் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து ஹூண்டாய் அடுத்தடுத்த பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. மேலும், பாதிப்பு குறித்து ஐயோனிக் 5 கார் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கூறியதைப் போலவே இந்த பாதிப்பு கட்டணம் ஏதுமின்றியே சரி செய்துக் கொடுக்கப்பட இருக்கின்றது.

ஹூண்டாய் ஐயோனிக் 5 ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். இந்த எலெக்ட்ரிக் கார் 72.6 kwh பேட்டரி பேக்கையே கொண்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 631 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது அராய் (ARAI) சான்றளித்த அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் விபரமாகும்.

இதேபோல், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மின்சார மோட்டார் அதிக ஆற்றலை வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது. அது 214.5 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 185 கிமீ ஆகும். அதேவேளையில், 7.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தையும் அது எட்டிவிடும்.

இதேபோல், இந்த காரை அதிக வேகத்தில் சார்ஜ் செய்யவும் முடியும். அந்தவகையில், 350 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தை பன்படுத்தும்போது சுமார் 18 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். அதேவேளையில், 50 kW டிசி சார்ஜிங் பாயிண்டை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போது 10-80 சதவீதம் சார்ஜை எட்ட அது 57 நிமிடங்களை எடுத்துக் கொள்ளும்.

அதிகபட்சமாக வீட்டு சார்ஜிங் பாயிண்டில், அதாவது, 11 kW சார்ஜரைக் கொண்டு முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் 55 நிமிடங்கள் வரை ஆகும். ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் 46.05 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அளவு அதிக விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவில் பணக்காரர்கள் மட்டுமே நுகரக் கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் ஐயோனிக் 5 காட்சியளிக்கின்றது. இந்த காரில் தற்போது சிக்கல் ஏற்பட்டு இருப்பது அதன் உரிமையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2024, 11:07 [IST]
English summary
Hyundai ioniq 5 recall india over 1700 units affected
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+