போன வருஷம் விற்பனையானதுல பாதி கூட ஆகல! ஹூண்டாய் தயாரிக்கும் காரை வெறும் 42 பேர் தான் வாங்கியிருக்காங்க!
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக இந்த நிறுவனம் இருக்கிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக இந்நிறுவனம் இருக்கிறது. ஆனால் இந்நிறுவனத்தின் ஒரு காரை வெறும் 42 பேர் மட்டும் தான் வாங்கி உள்ளார்கள். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் இந்தியாவில் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எந்தெந்த கார்கள் எவ்வளவு விற்பனை செய்துள்ளது என்ற விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் அந்நிறுவனம் விற்பனை செய்த அதிக எண்ணிக்கையிலான காராக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 14,662 கார்களை விற்பனை செய்துள்ளது.

2023ம் ஆண்டு மே மாத விற்பனையை ஒப்பிடும்போது ஒரு சதவீதம் அளவிற்கு தற்போது ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபலமான எலெக்ட்ரிக் காரான ஹூண்டாய் அயானிக் 5 கார் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் பத்தாவது இடத்தில் இருக்கும் காராக இருக்கிறது.
கடந்த மே மாதம் மட்டும் ஹூண்டாய் காரை வெறும் 42 வாடிக்கையாளர்கள் மட்டுமே வாங்கி உள்ளார்கள். கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இதே ஹுண்டாய் அயானிக் 5 காரை 160 வாடிக்கையாளர்கள் வாங்கி இருந்தார்கள். தற்போது இதன் விற்பனை 74 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த காரின் விற்பனை வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இந்த கார் ஒரு சிறப்பான காராகவே வடிவமைக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

ஹூண்டாய் அயானிக்5 கார் 5 சீட்டர் கொண்ட ஒரு எலக்ட்ரிக் காராகும் இதில் 72.6 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 217பிஎச்பி பவரையும் 350என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரியர் வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. ஒரு முறை சார்ஜ் போட்டால் 631கிலோமீட்டர் தூரம் வரை இந்த காரை பயன்படுத்த முடியும்.
இந்த காரின் பேட்டரியை சார்ஜ் போட 0 முதல் 80% சார்ஜை வெறும் 21 நிமிடத்தில் ஏற்றி விடும். இதற்காக 150 கிலோ வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. 50 கிலோ வாட் சார்ஜர் மூலம் ஒரு மணி நேரத்தில் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் போட்டு விட முடியும். இந்த கார் மற்றும் நான்கு விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த காரின் உட்புறத்தை பொருத்தவரை 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதுபோக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், வெண்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.
இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 46.05 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விலை அதிகமாக இருப்பது இந்த காரின் விற்பனை குறைவாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இருந்தாலும், இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் காரின் வடிவமைப்பு காரணமாக பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள் எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் மக்கள் பலர் இந்த காரை ஒரு ஆப்ஷனாக தேர்வு செய்கிறார்கள். பணம் அவர்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை என்ற பட்சத்தில் இந்த கார் நிச்சயம் ஒரு நல்ல ஆப்ஷன் தேர்வாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக அதிக விலை கொண்ட கார்கள் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகி வரும் ஹூண்டாய் நிறுவனத்தை பொறுத்தவரை சிறந்த காராக இருக்கிறது. இந்த காரின் அம்சங்கள் மற்றும் மற்ற எந்த விஷயத்திலும் குறைபாடு இல்லை. இதன் விலை காரணமாகவே குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









