ஒரு மாசம் முழுக்க 30 கார் தான் வித்திருக்குது! இந்த காரை விக்க முடியாம திணரும் ஹூண்டாய்! என்ன கார் தெரியுமா?
ஜூலை மாதம் துவங்கிவிட்ட நிலையில் வரிசையாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகன விற்பனை நிலவரங்களை வெளியிட்டு வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் தங்கள் விற்பனை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனம் ஐம்பதாயத்திற்கும் அதிகமான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது. ஆனால் அதில் குறிப்பிட்ட ஒரு வாகனம் மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. அதை பற்றி தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 50,103 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஐம்பதாயிரம் வாகனங்களை கடந்து நிறுவனம் சிறப்பான விற்பனையை செய்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் எஸ்யூவி ரக தயாரிப்பதுதான். அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. முக்கியமாக கிரெக்டா, வென்யூ மற்றும் எக்ஸ்டர் ஆகிய கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன.

இது ஒரு பக்கம் இருந்தாலும், இந்நிறுவனம் வெளியிட்டு வரும் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மிக மோசமான அளவுக்கு குறைந்து வருகிறது. ஏற்கனவே ஹுண்டாய் நிறுவனம் தனது கோனா என்ற எலெக்ட்ரிக் காரை தற்காலிகமாக விற்பனையிலிருந்து நிறுத்தி உள்ளது. இந்த காருக்கு பதிலாக ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெக்டா என்ற காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை கொண்டு வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் ஹுண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வரும் அயானிக் 5 என்ற கார் கடந்த மாதம் வெறும் 30 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது ஒரு எலெக்ட்ரிக் கார் என்பதால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களிலேயே மிகக் குறைவான விற்பனை பெற்ற கார் இந்த அயானிக் 5 கார் தான்.

கடந்த ஜூன் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 16,293 கிரெட்டா காரையும், 9890 வென்யூ காரையும், 6908 எக்ஸ்டர் காரையும், 5315 ஐ20 காரியும், 4948 கிராண்ட் ஐ10 நியோஸ் காரையும், 4299 ஆரா காரையும், 882 அல்கஸார் காரையும், 114 டுஸான் காரையும் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலிலேயே கடைசி இடத்தில் அயானிக்5 என்ற கார் தான் இருக்கிறது. ஜூன் மாதம் வெறும் 30 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
ஹூண்டாய் அயானிக் 5 காரின் கடந்த ஆறு மாத விற்பனை விபரங்களை வைத்து பார்க்கும் போது காதல் ஜனவரி மாதம் 95 கார்களும், பிப்ரவரி மாதம் 66 கார்களும், மார்ச் மாதம் 65 கார்களும், ஏப்ரல் மாதம் 45 காரர்களும், மே மாதம் 42 கார்களும் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆறு மாதத்திலேயே குறைவாக கடந்த ஜூன் மாதம் தான் 30 கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த கார் கடந்த ஆறு மாதம் மொத்தம் சேர்ந்து 343 கார்கள் தான் விற்பனையாகியுள்ளன. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் விற்பனையாகும். டாப் 10 கார் பட்டியலில் கூட இருக்கிறது. அதேநேரம் அந்நிறுவனம் தயாரிப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. அதுவும் கடந்த ஜூன் மாதம் கடந்த ஆறு மாதத்தில் இல்லாத அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது..
ஹூண்டாய் அயானிக் 5 காரை பொருத்தவரை 4634 மிமீ நீளமும், 1890 மிமீ அகலமும், 1225 மிமீ உயரமும் கொண்ட காராக இருக்கிறது. இந்த கார் 3000 மிமீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் உள்ள உட்புறங்கள் எல்லாம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்த கார் 72.6 கிலோவாட்ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 217 எச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரை 10-80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற வெறும் 18 நிமிடங்கள் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சொகுசு ரக காராக இருக்கிறது. அதனால் இந்த காரின் விலை மிக அதிகமாக இருக்கிறது. இதுவும் இந்த காரின் விற்பனை தெரிவிக்கும் மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. இந்த கார் ரூபாய் 46 லட்சம் என்ற விலையில் விற்பனை ஆவதால் இந்த செக்மெண்டில் உள்ள கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு அதன் காரணமாக விற்பனையும் குறைவு.


Click it and Unblock the Notifications









