குடும்பத்துடன் 7 பேர் இந்த கார்ல போகலாம்! பெட்ரோலே போட வேணாம்! விலை என்ன தெரியுமா?

தற்போது உலகம் முழுவதும் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனத்தை தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் இந்த ரக கார்களை அதிகம் தயாரிக்க துவங்கி விட்டார்கள். புதிய ரக கார்களை கொண்டு வரும்போது அது குடும்பத்துடன் பயணிக்கும் அம்சங்கள் நிறைந்த காராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு புதிய வடிவமைப்புகளை வழங்குகிறார்கள். அதன்படி ஹுண்டாய் நிறுவனமும் புதிதாக 7 சீட்டர் கொண்ட கார் ஒன்றை இந்திய மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்போகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு தனது கான்செப்ட் 7 காரின் முதல் காட்சிப்படுத்தியது. இந்த கார் கியா நிறுவனத்தின் இவி9 கார் போலவே உருவாக்கப்பட்ட கான்செப்ட் கார் ஆகும். இந்த இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வடிவமைப்பில் உட்புறமும் வெளிப்புறமும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹுண்டாய் நிறுவனம் இந்த காரை இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்காக தயாரிக்க முடிவு செய்துள்ளது.

hyundai ioniq 9

ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை மற்ற டாப் மாடல் எஸ்யூவி கார்களைப் போல பாக்ஸியான வடிவமைப்பு உள்ளே வளைவு நெளிவுகளுடன் கூடிய டிசைன் அம்சங்கள் நிறைந்ததாக இந்த காரை உருவாக்கியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த காரின் பவர் டெரைனை பொறுத்தவரை போலவே அதே பேட்டரி மற்றும் மோட்டார் செட்டப்புடன் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

கியா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் சர்வதேச அளவில் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஹூண்டாய் நிறுவனத்தின் பெயர் சர்வதேச அளவில் மிக அதிக பிரபலமானது.

hyundai ioniq 9

இதனால் 6 சீட்டர் வெர்ஷன் கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாக வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்த காரின் வேரியண்ட்கள் வரும்போது 6 சீட்டர் கொண்ட வேரியண்ட் அதிக எண்ணிக்கையில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவு அதிக எண்ணிக்கையில் 6 சீட்டர்கள் இருக்காது என கூறப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனம் இந்த காருக்கு அயானிக் 9 என பெயர் வைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஹுண்டாய் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த கார் அறிமுகமானால் ஹூண்டாய் லைன் அப்களிலேயே டாப் காராக இந்த கார் தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

hyundai ioniq 9

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். முதல் கட்டமாக இந்த கார் அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது. பின்னர் இது படிப்படியாக ஒவ்வொரு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்தியாவிற்கும் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இந்தியாவில் முழுமையாக இந்த காரை கட்டமைக்க நிறுவனம் முடிவு செய்யவில்லை. வெளிநாடுகளில் கட்டமைக்கப்பட்ட காரை தான் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த காருக்கு இந்தியாவில் பெரிய அளவுக்கு வரவேற்பு இருக்காது என்பதால் இப்படியான வழிமுறையை நிறுவனம் கையாண்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ம் ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் இந்த கார் விற்பனைக்கு வந்தாலும், இந்தியாவிற்குள் இந்த கார் விற்பனைக்கு வரும்போது 2026ம் ஆண்டு ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த கார் அப்படியாக இந்தியாவிற்குள் முழுமையாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்கிறது.

இதனால் ரூபாய் 90 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. முழுமையாக கட்டமைக்கப்பட்ட காருக்கு இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிப்பு இருப்பதால் இவ்வளவு அதிகமான விலையில் தான் இந்த கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வளவு அதிக தொகை இருந்தாலும், இந்த காரை வாங்குவதற்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்த காரின் கான்செப்ட் காரை பார்க்கும் போதே இது ஒரு குட்டி அரண்மனை போன்ற தோற்றத்தை கொடுத்தது. இந்த கார் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்போது இது ஒரு சொகுசு பங்களாவில் இருப்பது போன்ற வசதி நிறைந்த காராக விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களில் விற்பனை அதிகமாகி வரும் நிலையில், ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை வெளிநாட்டில் தயாரித்து இந்தியாவில் இறக்குமதி செய்வதால் இதன் விற்பனை குறைவாக இருக்கும். எதிர்காலத்தில் இந்த காரை நிறுவனம் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் இதன் விற்பனை அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, July 22, 2024, 9:00 [IST]
English summary
Hyundai ioniq 9 electric three row suv debut this year
மேலும்... #hyundai #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X