எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடாவை பின்னுக்கு தள்ளிய ஹூண்டாய்! 13 ஆண்டில் 15 லட்சம் கார்கள் விற்பனை!

ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து கடந்த 13 ஆண்டுகளில் மொத்தம் 15 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து உள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் இந்த சாதனையை பகிர்ந்து செய்தது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தென்கொரியா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஹூண்டாய். இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவிலும் இந்நிறுவனம் தனது ஆலையை அமைத்து இந்தியாவிலேயே கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. உலக அளவில் ஹுண்டாய் நிறுவனத்திற்கு என்று தனியாக பெயரும் இருக்கிறது.

hyundai kia electric car sales

ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமாக கியா என்ற நிறுவனம் தென்கொரியாவில் உருவாக்கப்பட்டது. தற்போது அந்நிறுவனமும் உலகம் முழுவதும் தனி நிறுவனமாக துவங்கப்பட்டு கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இரு நிறுவனமும் தனித்தனியாக இயங்கினாலும் ஒரே தொழில்நுட்பத்தை கொண்ட வாகனங்களை தான் உருவாக்கி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. தயாரிப்புகளை மட்டும் தனித்தனியாக செய்து வருகின்றன.

இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தயாரித்த எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம் ஹூண்டாய் பிராண்டிலும் கியா பிராண்டிலும் தனித்தனி வாகனங்களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கு அந்நிறுவனம் ப்ளூ ஆன் என பெயரிட்டது.

hyundai kia electric car sales

2011-ம் ஆண்டு ஜூலை மாதம் ப்ளூஆன் என பெயரிடப்பட்ட இந்த கார் தென்கொரியா மார்க்கெட்டில் அறிமுகமானது. இது கிட்டத்தட்ட பார்க்க i10 ஹேட்ச் பேக் கார் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மிக மெதுவாக தான் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு துவங்கும் போது அந்நிறுவனம் மொத்தமே 5,16,441 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்நிலையில் 2023-ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது என கணக்கீடு செய்து பார்க்கும் போது மொத்தமாக 15.3 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. முக்கியமான காரணம் கியா மற்றும் ஹுண்டாய் பிராண்டில் 10 புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் கடந்தாண்டு அறிமுகம் ஆகியுள்ளன.

hyundai kia electric car sales

தென்கொரிய மார்க்கெட்டில் இந்த கார்கள் அதிக அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் ஹூண்டாய் பிராண்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக ஹூண்டாய் கோனா, எலெக்ட்ரிக் மற்றும் அயானிக் 5 எலெக்ட்ரிக் கார்கள் உள்ளன. அதே நேரம் மற்றும் இவி 6 ஆகிய இரண்டு கார்களும் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இது மட்டுமல்லாமல் வரும் காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக உள்ளன.

ஹூண்டாய் நிறுவனம் தனது கேஸ்பர் மினி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கியா நிறுவனம் ஏற்கனவே தனது இவி3 காம்பேக்ட் இவி காரை தயாரிக்க ரெடியாகிவிட்டது0 இது இந்த ஆண்டு 2ம் காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

hyundai kia electric car sales

ஹூண்டாய் நிறுவனம் இந்த 2024-ம் ஆண்டு மொத்தம் 42.4 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. நேரம் கியா பிராண்டில் மட்டும் மொத்தம் 32 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. உலக அளவில் டொயோட்டா, போக்ஸ்வேகன் வாகனத்தை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச அளவில் கியா மட்டும் ஹூண்டாய் நிறுவனங்கள் இணைந்து அதிகமான எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகின்றன. இருந்தாலும் இந்தியாவில் நிறுவனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை வைத்துள்ளனர். இதனால் பல்வேறு வாகனங்கள் இந்தியாவிற்கும் வரும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 16:48 [IST]
English summary
Hyundai kia electric car sales 15 lakhs 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X