ஹூண்டாய் கோனா காரில் பெட்ரோல் வெர்ஷன் வருதா? புது அப்டேட் குறித்த புதிய தகவல்கள்!
ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்யூவி எலெக்ட்ரிக் காரான கோனா என்ற எலெக்ட்ரிக் காரை தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இருந்து அந்நிறுவனம் நீக்கி உள்ளது. தற்போது அனைவரும் எலெக்ட்ரிக் கார் செக்மெண்டில் அயானிக் 5 என்ற எலெக்ட்ரிக் காரை மட்டுமே விற்பனை செய்து வருவதாக இணையதளத்தில் தகவல்களை வைத்துள்ளது. ஹூண்டாய் கோனா காரில் பெட்ரோல் வெர்ஷனவ் வரப்போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது போக எலெக்ட்ரிக் வெர்ஷனும் அப்டேட்டாகவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு கோனா என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் தான் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய முதல் எலெக்ட்ரிக் ஆகும். இது ஒரு பிரீமியம் எஸ்யூவி கார் என்பதால் விற்பனை அதிக எண்ணிக்கையில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக இந்த காரை ஒருவர் கூட வாங்க முன்வரவில்லை.

கடந்த இரு மாதங்களாக ஒரு கார் கூட விற்பனையாகாத நிலையில், ஹுண்டாய் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இந்த ஹூண்டாய் கோனா காரை நீக்கி உள்ளது. இதனால் ஹூண்டாய் ரசிகர்கள் மத்தியில் கோனா காரும் விற்பனையிலிருந்து நீக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது. தற்போது ஹூண்டாய் நிறுவனம் அயானிக் 5 காரை மட்டுமே தனது எலெக்ட்ரிக் காராக விற்பனை செய்து வருவதாக இணையதளத்தில் தகவல்களை வைத்துள்ளது.
ஆனால் இதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை ஹுண்டாய் நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட கோன காரை ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரை இந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக ஏற்கனவே இருக்கும் பழைய காரை தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளது. விரைவில் இந்த காருக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் உள்ளன. இதுவரை ஹூண்டாய் நிறுவனம் கோனா காரை நிறுத்துவதாக எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஹுண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் தனது அயானிக் 6 என்ற எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு காட்சிப்படுத்தியிருந்தது. இந்த காரையும் விரைவில் இந்தியாவிற்கு கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இதுபோக அயானிக் 7 காரை விரைவில் அந்நிறுவனம் சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப் போகிறது. இது இ-ஜிஎம்பி பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராகும்.
ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா காரை புதிய தலைமுறையாக அப்டேட் செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தும்போது அதை எலெக்ட்ரிக் காராக மட்டுமல்லாமல், அதில் பெட்ரோல் வெர்ஷன் காரையும் அறிமுகப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த காரில் ஏகப்பட்ட அப்டேட்களும் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது மட்டும் அல்லாமல் ஹூண்டாய் நிறுவனம் அடுத்தடுத்து பல்வேறு விதமான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. 2025ம் ஆண்டு தனது கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இது போக ஏற்கனவே சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் சில எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மிட்- சைஸ் செக்மெண்டில் பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி மாருதி, டொயோட்டா, டாடா, மஹிந்திரா, ஆகிய நிறுவனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை வரிசையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்ஏ போட்டியாக கோனா பெட்ரோல் வெர்ஷன் காரும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
புதிய அப்டேட் செய்யப்பட்ட ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் உட்புறமும் வெளிப்புறமும் ஏகப்பட்ட அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக வெளிப்புறத்தில் புதிய ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட் கிளஸ்டர்கள், ஹரிசாண்டல் எல்இடி லைட் ஸ்ட்ரிப்களுடன் அப்டேட் செய்யப்பட்டு பொருத்தப்பட உள்ளன. மேலும் சார்ஜிங் போர்டுகள் முன் பக்கம் வர உள்ளது .
முன்புறம் பெரிய ஏர் இன் லெட் மெட்டாலிக் இன்செர்ட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வீல் ஆர்ச்கள் சதுர வடிவில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்லோப்பிங் ரூஃப் லைன் புதிய கருப்பு நிற கிளாடிங் ஆகியன உள்ளன. இந்த காரில் பேட்டரியும் பெரியதாக வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனத்தின் கார் என்பதால் இதன் விலை அதிகமாக இருக்கும். இதனால் இதன் விற்பனை குறைவாக தான் இருக்கும் என்பது ஹூண்டாய் நிறுவனத்திற்கு நன்கு தெரியும். இதன் பெட்ரோல் வெர்ஷன் காரும் விலை அதிகமாக இருக்க தான் வாய்ப்புள்ளது. பெட்ரோல் வெர்ஷன் கார் எப்பொழுது வருகிறது என்ற தகவல் இதுவரை தெளிவாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications









