ரூ4 லட்சம் தள்ளுபடி கொடுத்தும் யாருமே இந்த சூப்பரான காரை வாங்கல! எப்படி இதுல என்ன பிரச்சனை இருக்குது?
இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் நிறுவனத்திற்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கிறது. இதனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மாருதி நிறுவனத்திற்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இந்த ஹூண்டாய் நிறுவனம் தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பை ஒருவர் கூட வாங்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன கார் என்ற முழுமையான விபரங்களை காணலாம்.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைத்து அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய மோசடி இருக்கிறது. தொடர்ந்து இந்நிறுவனம் பல்வேறு விதமான தயாரிப்புகளை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

மார்க்கெட்டில் மக்கள் விரும்புவதற்கு ஏற்ப தனது கார்களை அந்நிறுவனம் அப்டேட் செய்து வருவதால் மக்கள் பலர் ஹுண்டாய் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் கொண்ட கார்களை அனைத்து செக்மெண்டிலும் இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் என்றாலே மார்க்கெட்டில் தனி மவுசு தான் இருக்கிறது.
இந்நிலையில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் ஒரு தயாரிப்பை கடந்த மே மாதம் ஒருவர் கூட வாங்காத சோகமான நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஹூண்டாய் கோனா என்ற எலெக்ட்ரிக் காரை தான் கடந்த மாதம் ஒருவர் கூட வாங்காத சோகமான சம்பவம் நடந்துள்ளது. மே மாதம் ஹூண்டாய் நிறுவனம் இந்த கோனா காருக்கு ரூ4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்திருந்தது. அப்படி தள்ளுபடிகளை அறிவித்தும் ஒரு வாடிக்கையாளர் கூட இந்த தள்ளுபடியை பயன்படுத்தி ஒரு காரை கூட வாங்கவில்லை. அதனால் இந்த தள்ளுபடியை அந்நிறுவனம் இந்த மாதமும் நீட்டிப்பு செய்துள்ளது.
இது மட்டுமல்ல இந்த ஹுண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரை கடந்த ஏப்ரல் மாதமும் ஒரு வாடிக்கையாளர் கூட வாங்காத நிலையில் தான் கடந்த மே மாதம் இந்த காருக்கு ரூபாய் 4 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த கார் விற்பனையாவதற்காக தான் தள்ளுபடி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் யாராவது வாங்குகிறார்களா என்பதை ஜூன் மாதம் விற்பனை விபரங்களை நிறுவனம் வெளியிடும் போது தான் நமக்கு தெரிய வரும்.

ஹூண்டாய் கோனா காரின் கடந்த ஆறு மாத விற்பனை விபரங்களை பற்றி பார்க்கும்போது 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 வாகனங்கள் விற்பனையாக இருந்தது. அதையடுத்து புத்தாண்டு பிறந்த பிறகு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தான் இருப்பதிலேயே அதிகமாக 102 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. பிப்ரவரி மாதம் 86 வாகனங்களும், மார்ச் மாதம் 71 வாகனங்களும் விற்பனையாகி இருந்தன.
மார்ச் மாதத்துடன் இந்த வாகனத்தின் விற்பனை என்பது முற்றிலுமாக நின்று விட்டது. கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் ஒருவர் கூட இந்த வாகனத்தை வாங்காத சூழ்நிலை தான் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த காருக்கு அந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இவ்வளவு பெரிய தள்ளுபடி பெரும்பாலும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிக்க மாட்டார்கள்.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா காரைப் பொறுத்தவரை 48.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் 65.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. இதன் மூலம் இந்த கார் ஒரு தடவை சார்ஜ் போட்டால் 490 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தருகிறது. இந்த காரின் உட்புறம் 12.3 இன்ச் டூயல் ஸ்கிரீன் அடாஸ் தொழில்நுட்பம் எல்இடி லைட் எலெக்ட்ரானிக் கியர் செலெக்டர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹுண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் செக்மெண்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்கிறது. இதன் காரணமாக இதன் விலை அதிகமாக இருக்கிறது. இந்த காரின் விலை காரணமாகவே பலர் இந்த காரை வாங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். அதன் காரணமாக தான் தற்போது இந்த வாகனத்திற்கு அதிகமான தள்ளுபடிகளை ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









