மேக்-அப் பலமா இருக்கே... ஹூண்டாய் வென்யூ அட்வென்சர் பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்! 15,000 ரூபா மட்டுமே அதிகம்!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக வென்யூ (Venue) இருக்கின்றது. இந்த கார் மாடலின் சிறப்பு பதிப்பாகவே அந்நிறுவனம் வென்யூ அட்வென்சர் எடிசன் (Venue Adventure Edition) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 10.14 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலைக்கே பலதரப்பட்ட சிறப்புகள் இந்த பதிப்பில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, சில புதிய அம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது.

ஆகையால், அழகிலும், சிறப்பம்சங்களிலும் வழக்கமான வென்யூவை மிஞ்சும் வகையிலேயே இந்த சிறப்பு பதிப்பு காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக புதிய கிளாடிங்குகள் டோரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதிவர, சிவப்பு நிற பிரேக் காலிபர்கள், காரின் முன் மற்றும் பின் வீல்களில் சேர்த்திருக்கின்றனர்.

Hyundai venue adventure edition launched

தொடர்ந்து, முன் மற்றும் பின் பக்கத்தில் உள்ள ஸ்கிட் பிளேட்டுகளை ஹூண்டாய் கருப்பு நிறத்தால் அலங்கரித்திருக்கின்றது. மேலும், இந்த காரின் மேற்கூரையில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ரூஃப் ரெயில், விங் மிர்ரர்கள் மற்றும் சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டெனா ஆகியவற்றிலும் கருப்பு நிறத்தை ஹூண்டாய் சேர்த்திருக்கின்றது.

கூடுதல் ஹைலைட்டாக வென்யூ அட்வென்சர் பதிப்பில் ஸ்போர்ட்டி வகை பெடல்கள், டேஷ்கேமிரா - இரண்டு கேமிராக்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்த காரின் உட்பக்கத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அட்வெசன்சர் எடிசனுக்கான பிரத்யேக இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த இருக்கையை முனிவர் பச்சை (sage green) எனும் தனித்துவமான நிறத்தாலேயே அது அலங்கரித்திருக்கின்றது.

Hyundai venue adventure edition interior

இதே நிறமே காரின் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறமும், சிறப்பு கருப்பு நிற அலங்கரிப்பும்தான் இந்த சிறப்பு பதிப்பை தனித்துவமானதாகக் காண்பிக்கின்றது. அதேவேளையில், இந்த காரை நான்கு விதமான ஒற்றை நிற அலங்கரிப்புடன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஹூண்டாய்.

ரேஞ்ஜர் காக்கி (Ranger Khaki), அபிஸ் பிளாக் (Abyss Black), அட்லஸ் ஒயிட் (Atlas White) மற்றும் டைட்டன் கிரே (Titan Grey) ஆகியவையே அவை ஆகும். இதுதவிர, இரட்டை நிற தேர்விலும் இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்கும். கருப்பு நிற மேற்கூரை அலங்கரிப்பைக் கொண்டதாகவே அந்த டூயல் டோன் நிற தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும்.

Hyundai venue adventure edition seat

இந்த கருப்பு நிற அலங்கரிப்பை அதிகம் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த தேர்வுகள் கூடுதல் முரட்டுத் தனமானதாக் காட்சியளிக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இந்த சிறப்பு பதிப்பானது கருப்பு நிற 3டி மேட்களையும் பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாற்றங்களையே வழக்கமான பதிப்புகளிடம் இருந்து இந்த சிறப்பு பதிப்பு பெற்றிருக்கின்றது.

எஞ்சின் ஆப்ஷன் மற்றும் மற்ற அட்வான்ஸ்டு டெக்னாலஜி உள்ளிட்டவற்றில் வழக்கமான பதிப்பு மற்றும் சிறப்பு பதிப்பு இரண்டுமே ஒரே மாதிரியாகவே இருக்கும். மேலும், இந்த சிறப்பு பதிப்பானது எஸ்(ஓ) பிளஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய வேரியண்டுகளிலேயே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

வழக்கமான வேரியண்டைக் காட்டிலும் ரூ. 15 ஆயிரம், ரூ. 16 ஆயிரம் விலை வித்தியாசங்களில் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே வழக்கமான தேர்வுகளை வாங்க நினைப்பவர்கள் இந்த சிறப்பு பதிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என நம்பப்படுகின்றது. ஹூண்டாய் வென்யூ இந்தியாவில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆனால், இந்த சிறப்பை பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும். டீசல் ஆப்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை. ஹூண்டாய் வென்யூ இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, கியா சொனெட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கின்றது. இவற்றிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை இந்த சிறப்பு பதிப்பு இரட்டிப்பாக்கி இருக்கின்றது என்றே சொல்லலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹூண்டாய் மிக சிறப்பான விற்பனை வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் வென்யூ-வும் ஒன்றாகும். மலிவு விலையில் அதிகம் பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய கார் மாடலாக இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை புதிய வென்யூ அட்வென்சர் பதிப்பு வரும் நாட்களில் இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், சிறப்பு பதிப்பு என்பதால் இது குறைந்த நாட்களுக்கு மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2024, 12:33 [IST]
English summary
Hyundai launches venue adventure edition with prices starting at rs 10 15 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X