சென்னை ஹூண்டாய் ஃபேக்ட்ரி ஹை ஸ்பீடுல ஓடுது!! ஒரே மாதத்தில் 60 ஆயிரம் கார்கள்... ஷோரூம்ஸ் நிரம்பி வழியுது!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஹூண்டாய் கார்களின் விற்பனை வழக்கத்தை காட்டிலும் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதையும், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கையையும் இனி பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று ஹூண்டாய் ஆகும். ஆனால், ஹூண்டாயின் தாயகம் தென்கொரியா ஆகும். மாருதி சுஸுகிக்கு அடுத்து, இந்தியாவில் 2வது மிக பெரும் கார் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. இந்திய சந்தையில் இந்த 2வது இடத்திற்கு ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு இடையே சமீப காலமாக பரபரப்பான போட்டி நிலவி வருகிறது.

hyundai sold 60501 cars

இன்னும் சொல்லப்போனால், கடந்த 2 வருடங்களில் ஹூண்டாயை முந்தி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், பெரும்பாலான மாதங்களில் ஹூண்டாய் மோட்டார் தான் 2வது இடத்தில் இருந்தது. இந்திய கார்கள் மார்கெட்டில் இவ்வாறான ஒரு போட்டி சென்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நடந்து முடிந்த 2024 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 60 ஆயிரத்து 501 கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இதில் உள்நாட்டு விற்பனை, அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தால், 50 ஆயிரத்து 201 ஆகும். இது 2023 பிப்ரவரியில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 6.8% அதிகமாகும். மீதி, 10,300 ஹூண்டாய் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

hyundai sold 60501 cars

கார்கள் விற்பனையில் இந்த இமாலய வளர்ச்சி குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி தருண் கார்க் கூறுகையில், "ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 2024 பிப்ரவரியில் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 50 ஆயிரத்து 201 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.8% அதிகமாகும்.

2024ஆம் ஆண்டில் நாம் அடுத்தடுத்து போகும்போது, சாதகமான சூழலும் தொடர்கிறது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா 15,276 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் பிப்ரவரியில் முன்னணியில் உள்ளது. 2015இல் இருந்து 8 வருடங்களில் கிரெட்டாவின் மிக அதிகப்பட்ச மாத விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

hyundai sold 60501 cars

2015இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஹூண்டாய் கிரெட்டா கார்களின் மொத்த விற்பனை எண்ணிக்கையும் 1 லட்சத்தை கடந்த பிப்ரவரியில் தாண்டியது. இது கிரெட்டாவின் மறுக்க முடியாத மற்றும் அல்டிமேட்டான எஸ்யூவி என்கிற நிலையை மேலும் வலுப்படுத்தி உள்ளது. மேலும், இந்தியாவில் என் லைன் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா என் லைன் காருக்கான முன்பதிவுகள் திறந்திருப்பதாக அறிவித்தோம்" என்றார்.

ஹூண்டாய் நிறுவனத்துக்கு தற்சமயம் இந்தியாவில் 1,361 சேல்ஸ் மையங்களும், 1,549 சர்வீஸ் மையங்களும் உள்ளன. மொத்தம் 13 கார்கள் தற்போதைக்கு ஹூண்டாய் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன. நம் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்பத்தூரில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

hyundai sold 60501 cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கார்களின் விற்பனை ஆனது இந்தியாவில் மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. புதிய உச்சமாக ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. அதுவும், இத்தனை கார்களை 29 நாட்களை மட்டுமே கொண்ட பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2024, 19:12 [IST]
English summary
Hyundai motor india sold 60501 cars in 2024 february check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X