சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்ள போகும் ஹூண்டாய்.. புத்தாண்டுக்கு இப்படி ஒரு பரிசை தர போகுதா!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் தயாரிப்பு (கார்)-களுக்கு என தனி வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் நாட்டில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்தபடியாக கார் விற்பனையில் இருக்கக் கூடிய ஓர் பிராண்டாக ஹூண்டாய் இருக்கின்றது. இத்தகைய இடத்தைக் கொண்டிருக்கின்ற துணிச்சலோ என்னமோ, வருகின்ற புத்தாண்டில் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கக் கூடிய ஓர் பரிசை வழங்க இந்த நிறுவனம் முன் வந்திருக்கின்றது. அது வேறு ஒன்னும் இல்லைங்க, விலை உயர்வையே இந்த நிறுவனம் புத்தாண்டு பரிசாக வழங்க இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் பிரிவில் கிராண்ட் ஐ10 நியாஸ் (Grand i10 NIOS), ஐ20 (I20), ஐ20 என் லைன் (i20 N Line) ஆகிய கார் மாடல்களையும், செடான் கார்கள் பிரிவில் (Aura), வெர்னா (Verna) ஆகிய கார் மாடல்களையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், எஸ்யூவி கார்கள் எக்ஸ்டர் (Exter), வென்யூ (Venue), வென்யூ என் லைன் (Venue N Line), கிரெட்டா (Creta), கிரெட்டா என் லைன் (Creta N Line), அல்கஸார் (Alcazar), டக்சன் (Tucson) உள்ளிட்ட கார் மாடல்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், மின்சார கார்கள் பிரிவில் ஐயோனிக் 5 (Ioniq 5) எனும் ஒற்றை கார் மாடலை மட்டுமே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் அதிரடி முடிவால் இந்த கார் மாடல்கள் அனைத்தின் விலையும் விரைவில் உயரும் சூழல் உருவாகி இருக்கின்றது.
ஜனவரி 1, 2024 முதலே தன்னுடைய கார்களின் விலையை உயர்த்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. எந்தெந்த மாடலின் விலை எவ்வளவு உயர்த்தப்படும் என்கிற விபரம் வெளியாகவில்லை. அதேவேளையில், ரூ. 25 ஆயிரம் வரை ஹூண்டாய் கார்களின் விலை உயரக் கூடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவன கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கிரெட்டா மற்றும் எக்ஸ்டர் இந்த இரண்டு எஸ்யூவி கார்களுக்கும் நாட்டில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டுள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹூண்டாய் நிறுவனம் தன்னுடைய கார்களின் விலையை உயர்த்தும் திட்டத்தில் களமிறங்கி இருக்கின்றது.
இதனால் கணிசமான விற்பனை பாதிப்பை இந்த நிறுவனம் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், ஹூண்டாய் நிறுவனம் மட்டுமே அடுத்த ஆண்டில் கார்களின் விலையை உயர்த்தும் திட்டத்தில் இல்லை. இன்னும் பல நிறுவனங்கள் புத்தாண்டு பரிசாக விலை உயர்வையே வழங்க திட்டமிட்டு இருக்கின்றன.
ஆகையால், இந்த விலை உயர்வு ஹூண்டாய் கார் விற்பனையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் நம்பப்படுகின்றது. வாகன உற்பத்திக்கு ஆகும் அதிக செலவு சுமையை குறைக்கும் பொருட்டும், இன்னும் சில காரணங்களினாலும் வாகன உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வைச் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மேலும், கார் உற்பத்தியாளர்கள் மட்டுமல்ல இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் பலரும் வருகின்ற ஜனவரி மாதத்தில் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், புதிய வாகனம் வாங்கும் பிளானில் இருந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கிவிடுவது நல்லது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனங்கள் பல ஆயிரக் கணக்கான ரூபாய்களை சலுகையாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக சில டீலர்கள் தனிப்பட்ட சலுகையை வழங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே டிசம்பர் 31க்குள் புதிதாக வாகனம் வாங்கினால் கணிசமான தொகையை சேமித்துக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









