காரை லாக்/ அன்லாக் செய்ய மொபைல் போன் இருந்தால் போதும்.... நடிகர் ஷாரூக்கான் மார்க்கெட்டிங் பண்ணும் கார்!!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (Hyundai Motor India Limited) நிறுவனம் அதன் அல்கஸார் (Alcazar) எஸ்யூவி காரை அப்டேட் செய்ய உள்ளது. மார்க்கெட்டில் பிரபலமான கிரெட்டா காரின் 6 மற்றும் 7 வெர்சனாக அல்கஸார் விளங்குகிறது. மேம்படுத்தப்பட்ட புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரை வருகிற செப்டம்பர் 9ஆம் தேதியில் இந்திய சந்தையில் ஹூண்டாய் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் இந்த காரை பற்றிய விபரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது புதியதாக சில விபரங்கள் வெளியாகி உள்ளன.

பழைய அல்கஸார் கார் உடன் ஒப்பிடுகையில், புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கார் ஆனது தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மேம்பட்டதாக உருவாக்கப்படுகிறது. புதிய அல்கஸாரில் முக்கியமான அம்சமாக என்.எஃப்.சி டெக்னாலஜி (NFC Technology) உடன் டிஜிட்டல் சாவி வழங்கப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சாவியை பெறும் முதல் ஹூண்டாய் காராக அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் கருதப்படுகிறது.

advanced features in alcazar facelift

என்.எஃப்.சி டெக்னாலஜி மூலமாக காரை லாக்/ அன்லாக் மற்றும் ஸ்டார்ட் செய்வது உள்ளிட்டவற்றை தங்களது ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மூலமாக மேற்கொள்ளலாம். காரின் டிஜிட்டல் சாவியை அதிகப்பட்சமாக 3 வெவ்வேறு விதமான பயனர்கள் பயன்படுத்த முடியும். அதேபோல், சாவியை 7 வெவ்வேறு விதமான சாதனங்கள் உடன் இணைத்துக் கொள்ள முடியும்.

இது இல்லாமல், புதிய அல்கஸார் எஸ்யூவி காரில் 70க்கும் அதிகமான ப்ளூலிங்க் கனெக்ட்டட் கார் வசதிகளை பெறலாம். இந்த கனெக்ட்டட் கார் வசதிகளையும் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போன் மூலமாக பயன்படுத்தலாம். இந்த 70க்கும் அதிகமான வசதிகளில் வாய்ஸ் கண்ட்ரோலும் அடங்குகிறது. அதாவது, பயணத்தின்போது குரல் மூலமாக காரின் வசதிகளை பயன்படுத்தலாம்.

advanced features in alcazar facelift

இதற்காக, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 270க்கும் அதிகமான வாக்கியங்களை கார் புரிந்துக் கொள்ளும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரின் டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் எச்டி இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் உள்பட மொத்தம் 12 மொழிகளில் செயல்படக்கூடிய இந்த திரைகள் மூலமாக பயணம் செய்ய வேண்டிய திசைகளை வரைப்படத்துடன் பெறலாம். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் ஆனது தொடுத்திரை உடன் வழங்கப்பட உள்ளது. இவற்றுடன் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரில், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், 8 ஸ்பீக்கர்களை கொண்ட போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், வாய்ஸ் மூலமாக செயல்படக்கூடிய பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 2வது இருக்கை வரிசையில் வயர்லெஸ் போன் சார்ஜர் உள்ளிட்டவையும் வழங்கப்பட உள்ளன.

advanced features in alcazar facelift

காட்டில் கிடைக்கும் சத்தங்கள் மற்றும் மழை காலத்தில் உண்டாகும் சத்தங்கள் உள்ளிட்டவற்றை இந்த காரினுள் ஸ்பீக்கர்கள் மூலமாக பெறலாம். இது பயணத்தை மேலும் ஸ்பெஷலானதாக மாற்றும். மற்றப்படி, புதிய அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது, பழைய அல்கஸாரில் வழங்கப்பட்ட என்ஜின் ஆப்ஷன்கள் தான் புதிய அல்கஸாரிலும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

அல்கஸாரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசல் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அல்கஸார் காரில் அதிநவீன தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட உள்ளதில் இருந்து தனது வாகனங்களில் ஸ்மார்ட் தொழிற்நுட்பங்களை வழங்குவதில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. இத்தகைய புதுமையான டெக்னாலஜி அப்டேட்கள் வாடிக்கையாளர்களை கவருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 23:26 [IST]
English summary
Hyundai motor introducing new advanced technology features in alcazar facelift
மேலும்... #hyundai #hyundai alcazar #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X