சின்ன காரெல்லாம் செட் ஆகாது! குடும்பத்துடன் பயணிக்கும் காரை களம் இறக்கும் ஹூண்டாய்!
இந்திய மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக புதிய எஸ்யூவி காரை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. இப்படி Ni1i என்ற பெயரில் பெட்ரோல் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. விரைவில் இந்த கார் குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த கார் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையான புனே வெளிப்பகுதியில் உள்ள டேலிகான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஆலையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆலையில் தற்போது தனது புதிய வாகனங்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை எல்லாம் செய்து வருகிறது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனம் அந்த ஆலையில் புதிதாக ஒரு எஸ்யூவி காரை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் 24 முதல் 30 மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் அல்கஸார் காரைவிட சற்று ஒரு படி மேலேவும் டுஸான் காரைவிட கீழேயும் பொசிஷன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு மிகப்பெரிய போட்டியாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே பெட்ரோல் ஹைபிரிட் மாடலில் மாருதி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளன. முக்கியமாக ஸ்டிராங் ஹைபிரிட் வாகனங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த செக்மெண்டில் தன்னையும் நுழைத்துக் கொள்வதற்காக ஹுண்டாய் நிறுவனம் இந்த வாகனத்தை பெட்ரோல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை இயங்கும் வாகனமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்த கார் குறித்த அதிக அளவிலான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி அதிக இட வசதி கொண்ட 3 வரிசை சீட்டர் கொண்ட காராக இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வடிவமைப்பை பொறுத்தவரை எக்ஸ்யூவி 700 மற்றும் சஃபாரி ஆகிய கார்களைப் போல சதுர அமைப்பிலான வடிவமைப்பில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். காரை விட சற்று நீளமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் ஸ்டிராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் வாகனங்களை தயாரிக்கப் போகிறது என்ற தகவல் மட்டுமே வெளியாகி உள்ளது. இதுவரை எந்த இன்ஜினை எதற்காக பயன்படுத்தப் போகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் ஹுண்டாய் நிறுவனம் தனது டுஸான் காருக்கு 1.6 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜினை பயன்படுத்தி வருகிறது. இதே எஞ்சின் ஆப்ஷன் ஹுண்டாய் மற்றும் கியா பிராண்டில் உள்ள கார்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு வரும்போது அந்நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினில் இந்த ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பொருத்தி புதிய இன்ஜினாக உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ஹுண்டாய் நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தும்போது ஆண்டிற்கு 50,000 கார்களை தயாரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது.
மாருதி நிறுவனமும் இதே செக்மெண்டில் புதிதாக ஒரு காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. y17 என்ற கோடு பெயரில் தற்போது இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்தக் காரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் ஹுண்டாய் நிறுவனம் தனது வென்யூ காரையும் அப்டேட் செய்து வெளியிட ஒருபுறம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஹைபிரிட் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 2024ம் நிதியாண்டில் மொத்தம் விற்பனையான 4.23 மில்லியன் கார்களில் 89 ஆயிரம் கார்கள் ஹைபிரிட் காரர்களாக விற்பனையாகியுள்ளன. எலெக்ட்ரிக் கார்கள் 99 ஆயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளது. எலெக்ட்ரிக் காரை விட ஹைபிரிட் கார்கள் வெறும் 10,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே குறைவாக விற்பனை ஆகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீப நாட்களாக இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் வழங்க கார்களை மக்கள் அதிகம் விரும்பி வருகிறார்கள். இதனால் இந்த கார்களின் விற்பனை அதிகமாகி வருகிறது என்பதை புரிந்து கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக இப்படியான அதிக சீட்டர் கொண்ட எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன்படி தான் ஹூண்டாய் நிறுவனமும் இந்த காரை வடிவமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Autocar India


Click it and Unblock the Notifications








