நம்பவே முடியல... இந்த அழகான ஹூண்டாய் கார் இந்தியர்களுக்கா!.. கொல மாஸா ரெடி பண்ணி இருக்காங்க! படங்கள் வெளியீடு!

தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் தனக்கென மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்றது. இதுவே இந்தியாவின் மூன்றாவது மாபெரும் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். முந்தைய மாதங்களில் இரண்டாவது இடத்தை அலங்கரித்து வந்த இந்நிறுவனம், சொற்ப எண்ணிக்கையில் வாகனங்களைக் குறைவாக விற்பனைச் செய்ததனால் டாடாவிடம் அந்த இடத்தை பறிகொடுத்தது.

மேலும், சென்ற டிசம்பரில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹூண்டாய் அதன் புதுப்பிக்கப்பட்ட கிரெட்டா காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த தகவலை ஹூண்டாய் நிறுவனமும் உறுதி செய்துவிட்டது.

Hyundai creta

அது, வருகின்ற 16 ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்) அன்றே இந்த ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா காரை ஹூண்டாய் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த காரின் பக்கம் ஈர்க்கும் விதமாக ஹூண்டாய் நிறுவனம், ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவின் படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது.

கடந்த நாட்களில் இதேபோல் இந்தியர்களைக் கவரும் விதமாக இந்த ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை சிறுக சிறுகவென நிறுவனம் வெளியிட்டு வந்தது. இந்த நிலையிலேயே, அந்த நிறுவனம் முழுமையாக கிரெட்டாவைக் காட்சிப்படுத்தும் வகையில் அதன் முழு படங்களையும் வெளியிட்டு இருக்கின்றது.

Hyundai creta wheel

இந்த படங்கள் வாயிலாக ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டா மிகவும் அழகான காராக வடிவமைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. புதிய கிரில், எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர லைட்டுகள், அலாய் வீல், மற்றும் ரூஃப் ரெயில் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவிற்கு மிகுந்த அழகிய தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

மிக முக்கியமாக எல்இடி பகல்நேர லைட், பம்பர், ஹெட்லைட், பம்பர் மற்றும் பம்பரை சுற்றிலும் சில்வர் நிற ஸ்கிடே பிளேட் ஆகியவை வழங்கப்பட்டு இருப்பதே இந்த காருக்கு வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இது இந்த காரின் உட்பக்கத்திலும் அதிக சிறப்பம்சங்களை ஹூண்டாய் புதுப்பித்தலின்கீழ் வாரி வழங்கி இருக்கின்றது.

Hyundai creta interior

அந்தவகையில், புத்தம் புதிய டேஷ்போர்டு இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. டேஷ்போர்டு உடன் பொதிக்கப்பட்ட தோற்றத்தில் ஓர் திரை, தொடுதல் கன்ட்ரோல் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், டிரைவர்களுக்கான திரையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டேஷ்போர்டிலேயே மெல்லிய ஏசி வெண்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.

இறுதியாக ஆம்பியன்ட் லைட்டுகளும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாஸ் அம்சம், 360 டிகிரி கேமிரா, டைப் சி வகை யுஎஸ்பி சார்ஜர், வெண்டிலேட் வசதிக் இருக்கைகள் (முன் பக்கத்தில்), பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இந்த வழங்கப்பட்டு இருக்கின்றது.

Hyundai creta rear

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு மற்றும் முன்-பின் பக்க பார்க்கிங் சென்சார் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய அம்சங்களைத் தாங்கிய காராகவே ஹூண்டாய் கிரெட்ட எஸ்யூவி தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதையே அந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ரூ. 10.87 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமையும். ஒற்றை நிற தேர்வை பொருத்த 6 விதமான ஆப்ஷனும், டூயல் டோன் நிற தேர்வைப் பொருத்த வரை ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படும்.

புதிய ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்(ஓ), எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டெக் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ரோபஸ்ட் எமரால்டு பேர்ல் (இது புதிய நிற ஆப்ஷன்), ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே ஆகியவையே ஒற்றை நிற தேர்வுகள் ஆகும். டூயல்-டோன் வண்ண விருப்ப தேர்வில் அட்லஸ் ஒயிட்-கருப்பு நிற கூரை ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஹூண்டாய் கிரெட்டா இருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் மாடல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் ஹூண்டாய் அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் களமிறக்க இருப்பது அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இன்னும் பலமடங்கு இரட்டிப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 10, 2024, 23:10 [IST]
English summary
Hyundai officailly revealed facelift creta pics
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X