அழகோ அழகு.. காரை புதுப்பிச்ச மாதிரி தெரியல! புதுசா பொறக்க வச்சுட்டாங்க! புதிய கிரெட்டாவிற்கு புக்கிங் ஆரம்பம்!

புதிய ஹூண்டாய் கிரெட்டா (2024 Hyundai Creta Facelift) காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. எவ்வளவு ரூபாய் முன் தொகையில் முன்பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றது? புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்போது டெலிவரி வழங்கப்பட இருக்கின்றது? புதுப்பித்தலின்கீழ் இந்த காரில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டு உள்ளன. என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களில் கிரெட்டா (Creta)-வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையே விரைவில் ஹூண்டாய் வெளியீடு செய்ய இருக்கின்றது. ஜனவரி 16 ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Hyundai creta facelift front view

இந்த நிலையிலேயே, இந்த ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஹூண்டாய் கிரெட்டா (2024 Hyundai Creta Facelift)-விற்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் அல்லது அருகில் உள்ள ஹூண்டாய் கார் விற்பனையாளர் வாயிலாக இந்த காரை புக் செய்துக் கொள்ள முடியும்.

புதிய ஃபேஸ்லிஃப்ட் ஹூண்டாய் கிரெட்டா இ, இஎக்ஸ், எஸ், எஸ்(ஓ), எஸ்எக்ஸ், எஸ்எக்ஸ் டெக் மற்றும் எஸ்எக்ஸ் (ஓ) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஹூண்டாய் நிறுவனம் புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை இந்த காரில் செய்திருக்கின்றது. வெளி மற்றும் உட் பக்கத்தில் அது கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

Hyundai creta facelift bookings open

புதிய கிரில் மற்றும் முழு நீள எல்இடி லைட்டுகள் தனித்துவமான அமைப்பில் வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, க்ரில்லில் சதுர சதுரமான தோற்றம், அதற்கு கூடுதல் அழகை வழங்கும் வகையில் உள்ளது. இத்துடனேயே எல் வடிவ சிக்னேச்சர் லைட்டும் இந்த காரில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதைப்போலவே காரின் உட்பக்கமும் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

புத்தம் புதிய டேஷ்போர்டு இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. டேஷ்போர்டு உடன் பொதிக்கப்பட்ட தோற்றத்தில் ஓர் திரை, தொடுதல் கன்ட்ரோல் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டிரைவர்களுக்கான திரையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், டேஷ்போர்டில் மெல்லிய ஏசி வெண்டுகள், இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

Hyundai creta facelift

இறுதியாக ஆம்பியன்ட் லைட்டுகளும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த கார் தனக்குள் தாங்கி இருக்கின்றது. ஹூண்டாய் கிரெட்டா டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், அடாஸ் அம்சம், 360 டிகிரி கேமிரா, டைப் சி வகை யுஎஸ்பி சார்ஜர், வெண்டிலேட் வசதிக் இருக்கைகள் (முன் பக்கத்தில்), பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இந்த வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அம்சங்களை காரில் பயணிக்கும்போது மிகவும் அசத்தலான டிராவல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த காரில் ஆறு ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆட்டோ ஹோல்டு மற்றும் முன்-பின் பக்க பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Hyundai creta interior

இத்தகைய அம்சங்களைத் தாங்கிய காராகவே ஹூண்டாய் கிரெட்ட எஸ்யூவி தற்போது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதையே அந்நிறுவனம் விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது ரூ. 10.87 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமையும். ஒற்றை நிற தேர்வை பொருத்த 6 விதமான ஆப்ஷனும், டூயல் டோன் நிற தேர்வைப் பொருத்த வரை ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படும்.

ரோபஸ்ட் எமரால்டு பேர்ல் (இது புதிய நிற ஆப்ஷன்), ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே ஆகியவையே ஒற்றை நிற தேர்வுகள் ஆகும். டூயல்-டோன் வண்ண விருப்ப தேர்வில் அட்லஸ் ஒயிட்-கருப்பு நிற கூரை ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் கிரெட்டாவும் ஒன்றாகும். இந்த காரின் பக்கம் கார் காதலர்களை ஈர்க்கும் பொருட்டே ஹூண்டாய் தற்போது அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 2, 2024, 15:08 [IST]
English summary
Hyundai opens bookings for facelift creta suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X