ஒரு காரை விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்குமா? முதலிடம் மாருதின்னு நினைக்காதீங்க!
இந்தியாவில் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இந்த நிறுவனம் தான் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறது. மாருதி நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையை மற்ற எந்த நிறுவனங்களும் முந்த முடியாத சூழ்நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் மாருதி நிறுவனத்தின் லாபத்தை முந்தி இந்தியாவிலேயே அதிக லாபம் பெரும் பாகம் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
மாருதி நிறுவனம் தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது என்று நமக்கு நல்லா தெரியும். இந்நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளதால் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை நிறுவனம் தயாரித்து வருகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இந்நிறுவனம் தான் இருக்கிறது.

அதனால் மாருதி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிகமாக லாபம் ஏற்றும் வாகன தயாரிப்பு நிறுவனம் என நீங்கள் நினைத்தால் அது சரி இல்லை. மாருதி நிறுவனத்தை விட அதிக லாபம் பெற நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனம் தான் இருக்கிறது. இது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிகமான லாபத்தை எஸ்யூவி ரக கார்களில் தான் நீட்டுகின்றன.
நமக்கு கிடைத்த தகவலின் படி கடந்த நிதியாண்டில் முதல் 9மாதங்கள் அதாவது 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான விற்பனை விபரங்களை பார்க்கும்போது இருப்பதிலேயே அதிகபட்சமாக ஹுண்டாய் நிறுவனம் தான் 12.7சதவீதம் அளவிற்கு லாபம் ஈட்டி உள்ளது. மாருதி நிறுவனம் அதற்கு அடுத்த இடத்தில் 14.4சதவீதம் தான் லாபம் ஈட்டியுள்ளது. பலரும் எதிர்பார்க்கும் டாடா நிறுவனம் வெறும் 6.1சதவீதம் தான் லாபம் ஈட்டியுள்ளது.

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் பெற்ற லாபம் மற்றும் நிறுவனம் விற்பனை செய்த காரின் எண்ணிக்கையுடன் பார்க்கும்போது ஒரு காரை விற்பனை செய்வதன் மூலம் அந்நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைக்கிறது என்ற தகவல் நமக்கு தெரிய வரும். அதன்படி ஹூண்டாய் நிறுவனம் ஒரு காரை விற்றால் நிறுவனத்திற்கு ரூபாய் 75,000 லாபமாக கிடைக்கிறது.
இதுவே மாருதி நிறுவனம் ஒரு காரை மார்க்கெட்டில் விற்பனை செய்தால் அது நிறுவனத்திற்கு பெரும் வருவாய் ரூ60,150 தான் லாபமாக கிடைக்கிறது. இந்த வித்தியாசமே பெரிய வித்தியாசமாக இருக்கும் நிலையில் டாடா நிறுவனத்தின் லாபம் மிக குறைவாக இருக்கிறது. இந்நிறுவனம் பயணிகளுக்கான வாகனங்கள் குறித்த விபரங்களை முழுவதுமாக வெளியிடவில்லை.

இருந்தாலும் இந்நிறுவனம் தங்கள் வாகனங்களை வரி செலுத்துவதற்கு முன்னர் விற்பனை செய்து பார்த்து கணக்கு செய்யும்போது ரூ 21,300 ஒரு வாகனத்திற்கு லாபமாக கிடைப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக ஹூண்டாய் நிறுவனம்தான் வாகன விற்பனையில் அதிக லாபத்தை ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் சிறப்பாக விற்பனை செய்யும் கார் பட்டியலில் முதலிடத்தில் ஹேட்ச் பேக் கார் இல்லை. அதற்கு பதிலாக ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் அதிக எண்ணிக்கையிலான காராக எஸ்யூவி கார் தான் இருக்கிறது. தற்போது நிறுவனம் இரண்டு ஹேட்ச் பேக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இன்றைய மார்க்கெட்டில் ஹேட்பேக் காரை விட எஸ்யூவி கார்களில் தான் அதிக லாபம் கிடைப்பதாக வாகன தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
ஒரு வாகன தயாரிப்பு நிறுவனத்தின் லாபம் என்பது காரின் விலையில் மட்டுமல்ல நிறுவனம் எப்படி அந்த காரை தயாரித்து வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் அந்த காருக்கு எவ்வளவு வரவேற்பு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் எல்லாம் வழங்குகிறது என்பதை பொறுத்துக் கூட மாறுபடுகிறது. இதன் காரணமாகவே மாருதி நிறுவனத்தை ஹுண்டாய் நிறுவனம் முந்தி உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கும் மாருதி நிறுவனத்திற்கும் மிகப்பெரிய அளவிலான விற்பனை வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி ஹுண்டாய் நிறுவனம் தான் அதிக லாபத்தை ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது. இதற்காகஅந்நிறுவனம் செய்யும் யுக்தி தான் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் குறைந்த விலையில் வாகனங்களை விற்பனை செய்ய கவனம் செலுத்தியதால் லாபம் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









